நஜிப்: சமயங்களுக்கிடையில் எழும் சிவில் திருமணங்கள் சம்பந்தமான விவகாரங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்

 

najசமயங்களுக்கிடையில் சிவில் திருமணங்கள் பற்றி எழும் சர்ச்சைகளை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு வகைசெய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புக்குண்டுள்ளதாக பிரதமர் நஜிப் இன்று கூறினார்.

சட்டச் சீர்திருத்த (திருமணமும் விவாகரத்தும்) சட்டம் 1976 க்கான சட்ட திருத்தம் அடுத்த அக்டோபர் நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என்றாரவர்.

இது சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அடிக்கடி எழுகின்றன. அவற்றை தீர்ப்பதற்கான வழியைக் காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.

கொண்டுவரப்படும் சட்ட திருத்தத்திற்கு மூன்று அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சிவில் திருமணத்தில் எழும் விவாகரத்து சம்பந்தமான பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றுக்கு சிவில் நீதிமன்றத்தில் தீர்வுகாண வேண்டும்.

இரண்டாவது, சம்பந்தப்பட்ட தம்பதிகள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பதோடு அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்கு வழி செய்கிறது. அவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களானால், மறுமணமும்கூட செய்துகொள்ளலாம்.

மூன்றாவது, தம்பதியினரில் ஒருவர் இஸ்லாத்திற்கு மாறும் போது சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களுக்கிடயில் மோதல் ஏற்படுகிறது. இப்போது இருக்கும் சட்டத்தில் இது பற்றிய குறைபாடு உண்டு. அதை இந்தச் சட்ட திருத்தம் தீர்க்கும் என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.