எம்ஏசிசி: பெரிய மீனோ, சின்ன மீனோ, ஆதாரம் அவசியம்

maccமலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம்  “பெரிய  மீன்,  சின்ன  மீன்”  என்று  வேறுபாடு  பார்த்து   செயல்படுவதில்லை,   என்ன  ஆதாரம்  இருக்கிறதோ   அதன்  அடிப்படையில்தான்   செயல்படுகிறது  என அவ்வாணையதின்   அதிகாரி   முகம்மட்  ஜமிடான்   அப்துல்லா    கூறினார்.

“எம்ஏசிசி-இல்   நாங்கள்  பெரிய  மீன்,  சின்ன  மீன்  என்று   தேர்ந்தெடுத்து   வேலை  செய்வதில்லை.

“விசாரணை   செய்வதற்கு    ஆதாரங்கள்  அவசியம்.  இல்லை  என்றால்  எதைக்  கொண்டு  குற்றம்  சாட்டுவது?”,  என்றவர்  வினவினார்.

எம்ஏசிசி  பெரிய   மீன்களைப்  பிடிப்பதில்லை   என்று   குறைகூறப்படுவது  குறித்து   கருத்துரைத்தபோது   முகம்மட்  ஜமிடான்    இவ்வாறு  கூறினார்.