புகை மூட்டம் மோசமடைகிறது; தேசிய நாள் கொண்டாட்டம் பாதிக்கப்படுமா?

apiகிள்ளான்   பள்ளத்தாக்கில்   புகை  மூட்டம்  இன்று    மோசமடைந்திருந்தது. பல  இடங்களில்   தெளிவாக  பார்க்க  முடியவில்லை,  காட்டமான  நெடி   காற்றில்  கலந்திருந்தது.

ஆனாலும்,  சுற்றுச்சூழல்  துறை (டிஓஇ),    காற்றுத்  தூய்மைக்கேட்டுக்  குறியீடு (ஏபிஐ)   “நல்ல  நிலை  இருப்பதாகவும்”  “மிதமான  நிலையில்  இருப்பதாகவும்”  தெரிவித்தது.

புகை  மூட்டத்துக்கிடையிலும்  இன்று  டட்டாரான்  மெர்டேகாவில்   தேசிய  நாள்    பேரணிக்கான  ஒத்திகைகள்   நடந்தன.  பலர்  முகமூடி   அணிந்து    ஒத்திகைகளில்  கலந்து  கொண்டார்கள்.

சுங்கை  பீசியில்  பார்க்கும்  தொலைவு   குறைந்திருந்தது.  ஒரு  கிலோ  மீட்டர்  தூரம்வரைதான்     தெளிவாக  பார்க்க  முடிந்தது.

பெட்டாலிங்  ஜெயாவில்  நிலைமை   சற்று  மேம்பட்டிருந்தது.

காற்றுத்  தூய்மைக்கேட்டின்   அளவு   46,  ஷா  ஆலமில் 51,  புத்ரா  ஜெயாவில்  61,  போர்ட்  கிள்ளானில்  55  என  டிஓஇ  அறிவித்தது.

50  என்றால்  காற்று   தரமாக  உள்ளது.  50க்கும்  100-க்கும்  இடைப்பட்டிருந்தால்  காற்றின்  தரம்  மிதமான  நிலையில்  இருப்பதைக்  குறிக்கும்.