நஜிப்பின் கணக்கில் ரிம1 பில்லியன் இருந்ததற்கு ஆதாரம் காண்பிக்க முடியுமா? முகைதினுக்கு ஜாஹிட் சவால்

zahidபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்    வங்கிக்   கணக்கில்   கிட்டத்தட்ட  ரிம1 பில்லியன்  இருந்ததாகக்  கூறும்  முகைதின்   யாசின்    அதற்கான    ஆதாரத்தைக்  காண்பிக்க  முடியுமா  எனத்  துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்     ஹமிடி   வினவினார்.

“அவரிடம்  ஆதாரம்   இருந்தால்  காண்பிக்கச்  சொல்லுங்கள்”,  என  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அவர்  கூறினார்.

“அவர்(முகைதின்)  பிரதமர்மீது   குற்றம்  சாட்டுகிறார்.   எனவே,  அதற்கான  ஆதாரத்தைக்    காண்பிக்க   வேண்டும்.  ஏதோ  கேள்விப்பட்டதை  வைத்து     குற்றம்   சாட்டக்கூடாது”,  என  ஜாஹிட்  கூறினார்.

முன்னாள்     துணைப்   பிரதமரான  முகைதின்  யாசின்,  நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  அரபு  நன்கொடை    என்று   கூறப்படும்    ரிம2.6 பில்லியன்  வந்து  சேர்வதற்கு  முன்பே   ரிம1 பில்லியன்    இருந்ததாக     கூறியிருந்தார்.

முன்னாள்    சட்டத்துறைத்   தலைவர்   அப்துல் கனி  பட்டேல்   மூலமாக   அந்தத்  தகவல்  தமக்குத்   தெரிய  வந்ததாக   முகைதின்  சொன்னார்.