கிள்ளான் பள்ளத்தாக்கில் காலையில் திடீர் வெள்ளப் பெருக்கு

floodகாலை   நேரத்தில்  கொட்டிய   கடும்  மழையால்   கிள்ளான்  பள்ளத்தாக்கில்   பல  இடங்களில்  திடீர்  வெள்ளம்   பெருகி   மோசமான  போக்குவரத்து  நெரிசல்  ஏற்பட்டது.

பல  இடங்களில்  போக்குவரத்து  நிலைகுத்தி   நின்றதை  முகநூலில்   இன்போர்மாசி  மலேசியா   பதிவேற்றம்   செய்த  படங்கள்  காண்பித்தன.

சுபாங்  ஸ்கைபார்க்   முனையத்துக்குச்  செல்லும்   கூட்டரசு  நெடுஞ்சாலையில்   பல   கார்கள்  நீரில்  மூழ்கியிருந்தன.

தேசிய  வெள்ளக்  கண்காணிப்பு   மையம்,    அதன்  முகநூல்  பக்கத்தில்  சிலாங்கூரிலும்   கூட்டரசு  பிரதேசத்திலும்   உள்ளவர்கள்   வெள்ளம்   குறித்து   எச்சரிக்கையுடன்    இருக்குமாறு  கேட்டுக்  கொண்டிருந்தது.

கடும்  மழையினால்   கிள்ளான்  பள்ளத்தாக்கில்  பல   ஆறுகளில்  நீர்மட்டம்   உயர்ந்திருப்பதாக    அது  கூறிற்று.

சிலாங்கூரின்   பெட்டாலிங்,   கோலா  சிலாங்கூர்,  கோம்பாக்,  ஹுலு  சிலாங்கூர்,   கிள்ளான்   முதலிய  மாவட்டங்களிலும்  கூட்டரசுப்  பிரதேசத்திலும்  கடும்  மழை  பெய்ததை   மலேசிய   வானிலை   ஆய்வுத்துறையும்    உறுதிப்படுத்தியது. மழை  பிற்பகலிலும்  தொடரலாம்  என  அது  எச்சரித்துள்ளது.