இஸ்மா தலைவர் தேசநிந்தனை புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு

ismaகாஜாங்    செஷன்ஸ்   நீதிமன்றம்,  ஈக்காத்தான்   முஸ்லிமின்   மலேசியா(இஸ்மின்)   தலைவர்   அப்துல்லா  ஷேக்  அப்துல்  ரஹ்மான்   தேச    நிந்தனைக்  குற்றம்    புரிந்திருக்கிறார்   என   இன்று   தீர்ப்பளித்தது.

ஈராண்டுகளுக்கு  முன்பு   இஸ்மா    அகப்பக்கத்தில்     பதிவிட்டிருந்த   ஒரு  கட்டுரைக்காக   அப்துல்லா  ஷேக்மீது      தேச   நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டது.

‘Kedatangan pendatang Cina bersama penjajah British satu bentuk pencerobohan’ (பிரிட்டிஷ்  காலனியவாதிகளுடன்   சீனர்களின்   வருகையும்    ஒருவகை    ஊடுருவலே)  என்ற   கட்டுரைதான்  அவர்மீது   தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட   காரணமாகும்.

அப்துல்லா  ஷேக்   குற்றம்  புரிந்தார்  என்பதை   அரசுத்   தரப்பு   நிரூபித்துள்ளதாக   கூறிய   நீதிபதி  நோரிடா  ஆடம்   அவருக்கு  ரிம2,000  அபராதம்  விதித்தார்.  அபராதத்  தொகையைக்  கட்டாவிட்டால்  அவர்  ஈராண்டுச்  சிறை  செல்ல  நேரும்.