பினாங்கில் ‘கோமாளி-முகம் கொண்ட குவான் எங்’ படங்கள்

cmபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைக்  கோமாளிபோல்  சித்திரிக்கும்  படங்கள்  முன்பு    நாடு  முழுக்க  உலா  வந்ததுபோல்   இப்போது    பினாங்கு   முதலமைச்சர்   லிம்  குவான்   எங்கைக்  கோமாளிபோல்   காட்டும்   படங்கள்    வெளிவந்துள்ளன.

பினாங்கில்  பஸ்   நிறுத்தங்கள்,   தெரு  விளக்குக்   கம்பங்கள்   போன்றவற்றில்   லிம்மின்   கேலிச்சித்திரங்கள்  ‘Badut Banglo'(பங்களா  கோமாளி)   என்று  எழுதப்பட்டு   ஒட்டப்பட்டிருந்ததாக   அம்னோ  ஆன்லைன்    அறிவிக்கிறது.

ஒரு  மாதமாக   அப்படங்கள்  காணப்படுவதாக    கம்போங்   பூரோங்   குடியிருப்பாளர்   யுஸ்ரி  ரம்லி     கூறினார்.

பங்களா  ஊழல்  விவகாரத்தில்   சிஎம்  சிக்கிக்  கொண்டிருப்பது   தொடர்பில்   மக்கள்    கொண்டுள்ள    கருத்தைத்தான்   அவை    காட்டுகின்றன   என்றாரவர்.

பங்களா  வாங்கியது   பற்றி  லிம்  அப்படி  இப்படி  என்று  விளக்கமளிக்க  முயல்வது    அவரைக்   கோமாளியாகக்   காண்பிக்கிறது   என்றவர்   கூறியதாக    அம்னோ   செய்தித் தளம்   தெரிவித்துள்ளது.