தமிழர் கண்டனக் கூட்டம்: உண்மை நிலவரம் புரியவில்லை ஐஜிபிக்கு

protestபோலீஸ்   படைத்   தலைவர்(ஐஜிபி)     காலிட்    அபு    பக்கார்   உண்மை     புரியாமல்  பேசுகிறார்.

அண்மையில்  கோலாலும்பூரில்    தமிழர்   அமைப்புகள்   நடத்திய   ஆர்ப்பாட்டம்   குறித்துக்  கருத்துரைத்த    ஐஜிபி,   அது      தமிழீழ    விடுதலைப்  புலி(எல்டிடிஈ)களுக்கு   ஆதரவளிப்போரால்    ஏற்பாடு   செய்யப்பட்டது    என்று  கூறியிருந்ததில்    சிறிதும்  உண்மையில்லை  என  பினாங்கின்  இரண்டாம்நிலை   துணை  முதலமைச்சரும்      பிறை    சட்டமன்ற   உறுப்பினருமான  பி.இராமசாமி   கூறினார்.

அந்த  அமைப்புகள்,    இலங்கையில்    2009-இல்   முடிவுக்கு    வந்த   உள்நாட்டுப்  போரின்போது   பல்லாயிரக்கணக்கான     தமிழர்களின்    சாவுக்கும்   ஆயிரக்கணக்கானோர்     காணாமல்போனதற்கும்,  அவர்களில்    பலர்  சிறார்கள்,    தமிழ்ப்  பெண்கள்  ஈவிரக்கமின்றிப்   பாலியல்   வல்லுறவுக்கு  ஆளாக்கப்பட்டதற்கும்   காரணமான    மகிந்தா  ராஜபக்சே-இன்  வருகைக்கு  எதிர்ப்புக்குத்  தெரிவிக்கத்தான்    புத்ரா வாணிக  மையத்தில்   கூடினர்.

பல    ஆண்டுகளுக்கு   முன்பே  எல்டிடிஈ-இன்  கதை  முடிந்து   விட்டது.  ஸ்ரீலங்கா   தமிழர்களின்   நினைவில்   வேண்டுமானால்     அது    வாழ்ந்து  கொண்டிருக்கலாம்,    ஆனால்,     அதை  மீண்டும்  உயிர்ப்பிக்க  முடியாது   என்பதை    அவர்கள்   உணர்ந்தே   உள்ளனர்.

அப்படி  இருக்க,    ஆர்ப்பாட்டக்காரர்கள்    எல்டிடிஈ-க்கு     ஆதரவு    தெரிவிக்கத்தான்     அங்கு     கூடினார்கள்  என்று     நாட்டின்  போலீஸ்  படைத்     தலைவர்   எப்படிக்  கூறலாயிற்று?   அது   முழுக்க  முழுக்க    தவறு  என  இராமசாமி   ஓர்    அறிக்கையில்    கூறினார்.