திருமணச் சட்டத் திருத்த முன்வரைவை ஒப்புக்கொண்டோமா? மறுக்கிறது அனைத்து சமய மன்றம்

mohan1976  சட்டச்   சீரமைப்பு (திருமணம்,  மணவிலக்கு) சட்டத்துக்கு   அரசாங்கம்    கொண்டு  வரவுள்ள   திருத்தங்களுக்கு    ஒப்புதல்  கொடுத்திருப்பதாகக்   கூறப்படுவதை     மலேசிய   பெளத்தம்,   கிறிஸ்துவம்,    இந்து    சமயம்,    சீக்கிய  சமயம்  ,  தாவோயிச  ஆலோசனை   மன்றம் (எம்சிசிபிசிஎச்எஸ்டி)    மறுத்துள்ளது.

அச்சட்ட  முன்வரைவு    நாளைய   அமைச்சரவைக்   கூட்டத்தில்   தாக்கல்    செய்யப்படும்    என்றும்   உத்தேச  திருத்தங்களுக்கு  எம்சிசிபிசிஎச்எஸ்டி   ஒப்புதல்  கொடுத்திருப்பதாகவும்   கூறப்படுவதாக     அனைத்து   சமய    அமைப்பின்   துணைத்    தலைவர்   ஆர்.எஸ்.  மோகன்  ஷண்    இன்று  கோலாலும்பூரில்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

சிறார்களைத்    தன்மூப்பாக  மதம்  மாற்றுவதால்     எழுகின்ற     தகராறுகளுக்குத்   தீர்வு   காண்பதற்காக     அச்சட்டத்    திருத்தங்கள்   கொண்டு  வரப்படுகின்றன.   ஆனால்,  உத்தேச    திருத்தங்களை      எம்சிசிபிசிஎச்எஸ்டி   இன்னும்   கண்ணால்   காணவே    இல்லை   என்றாரவர்.

“இன்றுவரை,  சட்டத்திருத்த  முன்வரைவைப்  பார்க்கவே  இல்லை.  சட்டவரைவைப்  பார்க்காமல்    ஒப்புக்கொள்ள  முடியாது”,  என்றவர்   கூறினார்.