வாழ்வா-சாவா? கடும் நெருக்கடியில் கிழக்கு அலெப்போ மக்கள்

aleppoசிரியாவின் அலெப்போ நகர் மீது இரண்டாவது நாளாக கடுமையான வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இத்தாக்குதல்கள் இடமபெற்றுள்ன.

வியாழன் இரவு நடைபெற்ற தாக்குதலில் மட்டும் முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இதனிடையே நியூ யார்க்கில் அமெரிக்க-ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நீண்ட வன்முறைகள் தொடரும் சூழலில், அலெப்போவிலுள்ள 250,000 மக்கள் உதவிகளுக்காக காத்திருக்கின்றனர்.

உணவுப் பொருட்கள் நகருக்குள் செல்ல முடியாத நிலையில் தம்மிடமுள்ள பெரும்பாலான உணவு எதிர்வரும் திங்கள்கிழமைக்கும் காலாவதியாகிவிடும் என ஐ நா கூறுகிறது.

அரசால் மீட்கப்பட வேண்டும் அல்லது செத்து மடியவேண்டும் இதுவே கிழக்கு அலெப்போவிலுள்ள மக்களின் தலைவிதியாக உள்ளது. -BBC