‘எனக்குக் கடனட்டைகள் மூலம் பண உதவியா?’- சிரிக்கிறார் சரவாக் ரிப்போர்ட் செய்தியாசிரியர்

s reportசரவாக்  ரிப்போர்ட்    செய்தியாசிரியர்  கிளேய்ர்    ரியுகாசல்- பிரவுன்,    மூடி    மறைக்கப்படும்   தகவல்களை   அம்பலப்படுத்தும்   தம்முடைய    வலைத்தளத்தை     நடத்த  நிறைய   பணம்  பெறுவதாகக்   கூறப்படுவதைக்   கேட்டு  வாய்விட்டுச்    சிரிக்கிறார்.

அவர்,   அடையாளம்     தெரியாதவர்களின்     கடனட்டைகள்  மூலமாக   வலைத்தளத்தை      நடத்துவதற்குத்    தேவையான  பணத்தைப்  பெறுகிறார்   என    ஒரு    புதிய    இணையச்  செய்திதளமான    ஓபன்  சோர்ஸ்   இன்வெஸ்டிகேஷன்ஸ் (ஓஎஸ்ஐ)    கூறியிருப்பதை    மறுத்தார்.

“என்னிடம்   முன்கூட்டியே  பணம்   செலுத்தப்பட்ட    கடனட்டைகள்   இரண்டு   இருக்கிறதா?  எங்கே  அவை?”,  என்று  ரியுகாசல்   வேடிக்கையாகக்  குறிப்பிட்டார்.

“இணையத்தில்    புலனாய்வு இதழியலுக்கு     அவ்வளவு    செலவாகாது.

“இணையத்  தளத்திலேயே   தேடித்  துழாவி   நிறைய  (தகவல்களை)  பெறலாம்.  பலரைத்   தொடர்பு  கொள்ள  முடியும்,  எழுத  முடியும்.  இதற்கு   நிறைய  செலவாவதில்லை”,  என  நேப்பாளத்தின்   காட்மண்டுவில்   புலனாய்வு   இதழியல்    மீதான   மாநாட்டுக்கு   வந்திருந்த  ரியுகாசல்   கூறினார்.

கிளேய்ருக்கு    இரண்டு    கடனட்டைகள்   மூலமாக   தேவையான   நிதியுதவி  கிடைக்கிறது    என்றும்    அவற்றைக்   கொண்டு   “ஆடம்பர”ப்  பயணங்களில்   ஈடுபடுகிறார்  எனவும்   ஒஎஸ்ஐ   கடந்த   மார்ச்   மார்ச்   மாதம்  கூறியிருந்தது.

“யாரோ  வசதியானவர்கள்    அவருக்கு     நிதியுதவி  செய்கிறார்கள்.  வலைத்தளத்தை   நடத்த    மாதம்  $15,000   தேவைப்படுவதாக   ரியுகாசல்-  பிரவுனே  ஒப்புக்கொண்டிருக்கிறார்”,  என்றும்   ஓஎஸ்ஐ  கூறியது.

“என்னுடைய    வானொலித்   திட்டத்துக்குக்  கிடைத்த  பண உதவியைக்   கொண்டு   நான்   சில   பயணங்களை     மேற்கொண்டது   உண்டு.  அந்தப்    பண  உதவி   செய்தவர்   மழைக்காடுகள்  மற்றும்   மனித  உரிமை    விவகாரங்களில்   அக்கறையுள்ளவர்   ஒரு    ஐரோப்பிய    கொடையாளர்.

இங்கு    நான்  வருவதற்கு   மாநாட்டின்   ஏற்பாட்டாளர்கள்   உதவினார்கள்”,  என்று   கிளேய்ர்  கூறினார்.  ஊழல்  விசாரணை   என்ற  தலைப்பில்   பேசுவதற்காக   அவர்  அழைக்கப்பட்டிருந்தார்.

சரவாக்  ரிப்போர்ட்    நிதி  எங்கிருந்து   கிடைக்கிறது,  என்ன    செலவாகிறது    முதலிய   தகவல்களை    வெளியிட   தாம்   தயார்  என்றும்   அவர்   சொன்னார்.

ரியுகாசல் – பிரவுன்,  சரவாக்கில்   காடழிப்பு  மற்றும்   ஊழல்  குறித்த  தகவல்களை    வெளிச்சம்போட்டுக்   காட்ட  சரவாக்   ரிப்போர்ட்டை    2010-இல்   உருவாக்கினார்.  2010-இல்  சரவாக்   சுதந்திர  வானொலியையும்  அவர்  அமைத்தார்.