அம்பாங் தமிழ்ப்பள்ளி கட்டடம் குறைந்த விலையில் விடியல் குத்தகை வழங்கப்பட்டது.

contentwriting_1அம்பாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டடம் அணைத்து தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகக் குறைந்த குத்தகையாளருக்கு வழங்கப்பட்ட்து என்று அம்பாங் தமிழ்ப்பள்ளியின் வாரியத்தலைவர் திரு ஜேம்ஸ் காளிமுத்து அறிவித்தார்.

வாரியத்தின் கடைசி செயலவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட குறிப்பின் படி முதலில் தேர்வு செய்த குத்தகையாளர் நிறுவனத்தில் ஏதும் பலவீனங்கள் இருக்குமேயானால் இரண்டாம் நிலையில் உள்ள குத்தகையாளருக்கு இயல்பாக குத்தகை வழங்கப்படும் எனும் தீர்ப்பில் தலைவர் உறுதிகா  செய்த தீர்ப்பில்  எந்த  மாற்றமும் இல்லை என்று வாரியத்தின் துணை தலைவர் திரு பொன் ரங்கன் பத்திரிக்கைக்கு விடுத்த செய்தியில் குறிப்பிட்டுளார்.

தலைவரின் முடிவை மாற்றி அமைக்க மறுதேர்தல் வழி முனைவர் ராஜேந்திரன் அலுவகத்தில் நடந்த குத்தகையாளர் தேர்தல் செல்லுபடியாகாது என்ற தலைவரின் முடிவு சரி . காரணம் வாரியத்தின் நிர்வாக முடிவில் இடை சறுகளாக மூன்றாம் நபர் தலையிட்டு ஆலோசனை வழங்கி மறு தேர்தல் அல்லது ஆலோசனை வழங்குவது நியாயமல்ல.அதுபோது நடந்ததாக கூறப்படும் வாரியகூடடம் முறையற்றது,அப்படி தேர்தல் நடத்த வேண்டிய கூட்ட நிகழ்வு ஏதுமில்லை.

வாரியத்தின் குத்தகையாளர் தேர்வுக்கு பிறகே கடந்த 3/7/2016 தேதியன்று அம்பாங் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டட கால்நடும் விழா ம இ காவின் தலைவர் மாண்புமிகு சுப்ரா தலைமையில் வெகு சிறப்பாக  நடந்தேறியது.குத்தகையாளர் அன்று வராதற்கு காரணம் பள்ளியில் சிலர் வாரியத் தலைவரின் முடிவுக்கு பல முடிச்சுக்கள் போடவே தர்க்கலிகமாக  சமார்தானா  நோக்கத்தில் குத்தகையாளர் வரவில்லை.

தேர்வுசெய்த குத்தகையாளரிடம் பல முறை பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு ஆகக்குறைந்த விலையில் குத்தகையும் அதன் ஒபபந்தமும் வழக்கப்பட்டது என்று தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பல குழப்பத்தை ஏற்படுத்திய மலேசியா தோழன் பத்திரிகைக்கு இந்த பதில் அறிக்கை கொடுத்தும் ஏற்க மறுத்த பத்திரிக்கை தர்மம் அரசியல் காரணமாக ஏழாம் போனது வியப்புதான்.

ஒரு பத்திரிக்கை சமூக பதில் கோரிக்கைகளுக்கு வாய்ப்பு  தராமல் சட்டத்துக்கு பயந்து காரணம் காட்டினால் நியாமாக தோழனை மூடிவிட்டு போக வேண்டும். நினைப்பில் நியாய பிண்டங்களை வைத்து சமுதாயத்தை பீடங்கள் பரிவர்த்தனைக்கு ஆளாக்கக்கூடாது.

தகுதியற்ற ஒரு குத்தகையாளருக்கு கொடுக்க வேண்டும் என்ற பெ ஆ சங்க தனித்தலைவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் குத்தகை விவகாரத்திலும் வாரிய திட்டங்களில் தலையிட சட்டத்தில் இடமில்லை என்பதை புரியாத இந்த இருவரின்  காரணமாகத்தான் இவ்வளவு நாள் தாமதத்திற்கு காரணம்.

கடடடம் கட்ட முதலில் தேர்வு செய்த நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளாக  பல வேலைகளை செய்தபின் கல்வி இலாகா ஒப்புதல் தரவில்லை என்று தலைமை ஆசிரியர் தடைபோட புதிய இடத்தில் மறு மனுக்கள், மறுபடங்கள் என்று மேலும் ஒரு ஆண்டு ஓடியது. இதற்கான வேலைகளை தலைவரும், துணைதலைவரும் மட்டுமே கடுமையாக உழைத்த உழைப்பை மறந்து தலைவரின் குத்தகை தேர்வுக்கு மட்டும் தலைவிரித்தாடும் போக்கு கண்டிக்கதக்கது.

வாரியத்தில் நிதி  நிலைமையும் கடடட விலைக்கும் இன்னும் 50,000.00 தேவைப்படுகிறது. இதையும் குத்தகையாளர் கருத்தில் கொண்டு 300,000.00 வரை தாமத பணம் கட்ட ஒப்புதல் தந்துள்ளார்.இது கடடட தகுதி சான்றிதழ் கிடைத்தப்பிறகே  மீதத் தொகையை கட்டலாம் என்ற ஒப்பந்தமும் உண்டு. மேலும் கட்டடம் எந்த பிறரின் வம்பும் இல்லாமல் இருந்தால் 6 மாதத்தில் பள்ளியை கட்டிமுடிக்கவும் குத்தகையாளர் தயாரக உள்ளனர்.

அம்பாங் தமிழ்ப்பள்ளியின் அர்த்தமற்ற  அந்த நாளிதழ் செய்தி வழி சர்ச்சையாகிய காரணத்தால்… பிறகு ஞானபீடம் பிண்டங்களை கிளப்பாமல் இருக்க இன்றைய நிலைப்படி கடடடம் கட்ட 1,330.000.00 கட்ட முடிவாகியுள்ளது.

இது 1,450.000.00 தொகையிலிருந்து குறைக்கப்படட நிலையாகவும். சிலர் பொய் சொல்லி பிரச்சாரம் செய்வைத்து போல பிரம1,600.000.00 தொகையல்ல ! பெ ஆ சங்க தலைவரும் தலைமை ஆசிரியரும் அவரவர் வேலையை செய்தால் பள்ளிக்கு புண்ணியமாகவும்.

வாரியத்தலைவரும் துணைத்தலைவரும் பற்றாக்குறையாகும் இருக்கும் தகையை  சேர்க்க முன் வருமாறு பெ ஆ சங்க தலைவரிடமும் பழைய மாணவர் சங்க தலைவரிடமும் கேட்ட போது முடியாது என்று பிசுபித்தவர்கள் இன்று குழறுபடி செய்வது ஏன்?

அரசு கொடுத்த 1 மில்லியனும்  பள்ளியின் நிதியான 280,000.00 வாரியாதிடம்  உள்ளது. மீதம் 50,000 தேவைப்படுகிறது. பெ ஆ சங்கம் தர வேண்டிய வட்டி தொகையான  6.601.47  மற்றும் பெ ஆ சங்கம் வைத்திருக்கும்  அரசுப்பணமான 34,961.53 கொடுக்க வேண்டும். இது இரண்டும் சேர்த்தால் 41,563.00 பெ ஆ சங்கம் தர வேண்டும். தந்தால் மேலும் 8,437.00 தேவைப்படுகிது . இந்த 1,330.000.00  குத்தகை  தொகையில் கட்டிட கலைஞர் தொகையான 139,000.00 சேர்க்கவில்லை. இதையும் சேர்த்தால் பள்ளியின்  கட்டிடடத்தின் மொத்த தொகையோ 1,469.000.00 முடியும் என்பது வாரியத்தின் துணைத்தலைவரின் கணக்கியல் குறிப்பாகும்.  இதில் மாற்றங்கள் வரலாம். எந்த விலை மாற்றத்துக்கும் வாரியம் தயார் நிலையில் உள்ளது.

எங்கள்  அம்பாங் தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவிய ம இ கா, முன்னாள் பெ ஆ சங்க தலைவர்களில் இன்றைய வாரியதலைவர் திரு ஜேம்ஸ் காளிமுத்து அவர்களும் திரு பொன் ரங்கன் அவர்களுக்கும் சிறப்பு கடமைகள் UNDU. அதுபோலவே மூன்றவது கட்டடத்தையும் சிற்றுண்டிசாலையும்   கட்டி முடித்த முன்னாள் பெ ஆ சங்க தலைவர் திரு துரையப்பா அவர் தம் குழுவினருக்கும் வாரியம் நன்றி சொல்வதை கடமையாகக் கொள்கிறது. 64 ஆண்டுகளை தொடும் அம்பாங் தமிழ்ப்பள்ளி என்றும் சந்திக்காத சவாலை இப்போது சந்தித்துள்ளது. காலில் முள் தைத்தால் முள்ளைதான் பிடுங்கனும் என்பது எங்களுக்கும் தெரியும். காலை வெட்ட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மொழி, தமிழ் தளம் மேன்மையுற அம்பாங் மக்கள்  இன்று ஒன்று   நின்றால் அது போதும். இன்னும் பல சாதனைகள் புரிவோம். இந்த வேளை பிரதமர் துறை தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு இயக்குனர் முனைவர் ராஜேந்திரன் மற்றும் திரு முத்துசாமி அவர்களுக்கும் வாரியத்தின் சார்பில் எங்கள் நன்றிகள் பல.

இவண்,

பொன், ரங்கன்.
அம்பாங் தமிழ்ப்பள்ளி வாரியத் துணைத்தலைவர்