அன்வார் பிரதமராவதையே ஹராபான் விரும்புகிறது- புவா

puaபிரதமருக்கான   பக்கத்தான்   ஹராபானின்   வேட்பாளர்    அன்வார்  இப்ராகிம்தான். இதில்   மாற்றுக்கருத்துக்கு    இடமில்லை   என்கிறார்   டிஏபி    பிரச்சாரப்  பகுதித்    தலைவர்   டோனி   புவா.

ஹராபானின்   புதிய   தோழமைக்  கட்சியான   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)   ஆலோசகர்     டாக்டர்   மகாதிர்   முகம்மட்    அடுத்த   பொதுத்    தேர்தலில்   எதிரணி   வெற்றி   பெற்றால்   பெர்சத்துவின்    தலைவர்   முகைதின்   யாசின்   பிரதமராவதற்கு   நிறைய   வாய்ப்பிருப்பதாகக்  கூறியதை   அடுத்து   புவா   இப்படி   அறிவித்தார்.

அன்வார்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை   அனுபவிப்பதால்   அது   சாத்தியமா    என்று  வினவியதற்கு,  “அதைப்  பற்றி  பிறகு   கவலைப்படலாம்”,  என்றார்  புவா.