ஜெர்மனிக்கு மேலும் அதிகமான மாணவர்களை அனுப்புவது குறித்து மலேசியா பரிசீலிக்கும்

germanyமலேசியா  மேல்படிப்புக்காக   மேலும்   அதிகமான   மாணவர்களை   ஜெர்மனிக்கு   அனுப்புவது   குறித்து   பரிசீலிக்கும்    என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்    ரசாக்   கூறினார்.

இப்போதைக்கு   634   பதிவுபெற்ற   மலேசிய     மாணவர்கள்  ஜெர்மனியில்  கல்வி   பயின்று   வருகின்றனர்.

“ஜெர்மனியில்  டியுஷன்  கட்டணம்   இலவசம்  என்று   அறிகிறேன்.  மொழி  ஒன்றுதான்   பிரச்னை.    மாணவர்கள்   ஜெர்மன்  மொழியில்   புலமை   பெற்றவர்களாக   இருந்தால்  அவர்களை  ஜெர்மனிக்கு    அனுப்புவது    சாத்தியமே.

“வருங்காலத்தில்   மாணவர்கள்  சிலரை   ஜெர்மனிக்கு  அனுப்பும்    வாய்ப்புகளை   ஆராய்வேன்”.  பெர்லினில்   மலேசிய  தூதரகம்   ஏற்பாடு   செய்திருந்த    விருந்துபசரிப்பில்   கலந்துகொண்டபோது  நஜிப்  இவ்வாறு   தெரிவித்தார்.