‘இசி வாக்காளர் பதிவைத் தடுக்க முயல்கிறதா?’

puaதேர்தல்     ஆணையம்(இசி)   பல   கட்டுப்பாடுகளையும்  இடையூறுகளையும்    ஏற்படுத்துவதன்வழி   வாக்காளர்  பதிவு  நடவடிக்கைக்குக்  குழி  பறிக்கப்   பார்க்கிறது    என   சிலாங்கூர்   டிஏபி   குற்றம்   சாட்டியுள்ளது.

அக்டோபர்   3-க்குப்  பிறகு     சிலாங்கூர்   டிஏபி-இன்  வாக்காளர்  பதிவு   இயக்கங்கள்   அத்தனையையும்   நிறுத்திக்  கொள்ளும்படி   இசி   தெரிவித்திருக்கிறாம்.    சிலாங்கூர்  டிஏபி   தலைவர்   டோனி  புவா   கூறினார்.

உத்தேச  தேர்தல்  தொகுதிச்  சீரமைப்புக்குத்  தெரிவிக்கப்பட்டிருக்கும்   ஆட்சேபனைகளுக்குக்    கவனம்    செலுத்த  வேண்டியிருப்பதாக    இசி   காரணம்  கூறியுள்ளது    என்றாரவர்.

இம்மாதம்  சிலாங்கூர்   டிஏபி   மேற்கொண்ட   ஐந்து    வாக்காளர்   பதிவு    நடவடிக்கைகளுக்கும்   இசி   முழு   ஒத்துழைப்பு    வழங்கவில்லை.

“இசி-இன்    செயல்பாடுகள்  அதன்  திறமைக்குறைவையும்   பொறுப்புகளைத்   தட்டிக்கழிக்கப்  பார்ப்பதையும்தான்   காண்பிக்கின்றன.

“இன்னும்  மோசமாக  சொல்வதாக  இருந்தால்,   வாக்காளர்களின்  அடிப்படை  உரிமைகளை   மறுப்பதன்வழி   வாக்காளர்     பதிவு    நடவடிக்கைக்கே  குழிபறிக்கிறார்கள்  என்றுதான்   கூற   வேண்டும்”,  என்றார்.

இசி   வாக்காளர்  எண்ணிக்கையைப்  பெருக்க    ஒருமித்த  முயற்சியில்  ஈடிபடுவதை   விடுத்து    புதிய    வாக்காளர்களின்      பதிவை   முடிந்தவரை   தாமதப்படுத்தப்படுத்த  முயல்கிறது    என்று  புவா  சாடினார்.