கோயில் சிலைகளைச் சேதப்படுத்திய மருத்துவர் எதிர்வாதம் செய்ய பணிக்கப்பட்டார்

caseஈப்போ    செசன்ஸ் நீதிமன்றம்,    ஶ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயச்    சிலைகளை    உடைத்துச்   சேதப்படுத்தியதாகவும்    கையில்     தாக்குதல்     ஆயுதமொன்றை     ஏந்தியிருந்ததாகவும்     குற்றஞ்சாட்ட   29வயது    மருத்துவரை  எதிர்வாதம் செய்யும்படி   உத்தரவிட்டது.

டாக்டர் ஃபாத்தி முன்ஷிர்   நட்ஸ்ரிக்கு   எதிராகக்  குற்றம்   சுமத்த     தேவையான  ஆதாரங்கள் இருப்பதாக  நீதிபதி   இக்மால்  ஹிஷாம்  முகம்மட்   தாஜுடின்  கூறினார்.

இவ்வாண்டு   ஏப்ரல் 24,    மாலை ஐந்து மணியளவில்  ஜாலான்  ஹாஸ்பிடலில்  உள்ள   ஶ்ரீமுனீஸ்வரர் அம்மன் ஆலயச்   சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாக   குற்றவியல்   சட்டம்  பிரிவு  205-இன் கீழ் டாக்டர் ஃபாத்தி   மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கு   அக்டோபர்  17, 18-இல்  விசாரணைக்கு   வருவதாக   நீதிபதி   அறிவித்தார்.