தமிழகத்துக்கு துரோகம் செய்வதில் வென்றது மோடி அரசு! மேலாண்மை வாரிய உத்தரவை நிறுத்திய உச்சநீதிமன்றம்!

cauvery-water1டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. ஆனால் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜக அரசுகள் இதை கண்டுகொள்ளவில்லை.

18 ஆண்டுகாலம் மத்திய அரசில் பங்கேற்ற திமுகவும் எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக மேற்கொள்ளவும் இல்லை. உச்சநீதிமன்றமே காவிரி வழக்கில், 4 நாட்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் முதலில் இதற்கு ஒப்புக் கொண்டது.

ஆனால் தமிழகத்துக்கு துரோகம் செய்தே பழக்கப்பட்டுப் போன மத்திய அரசு திடீரென மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. இது தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது.

இந்த எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இன்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாடியது. இதனை வேறுவழியே இல்லாமல் உச்சநீதிமன்றமும் ஏற்று மேலாண்மை வாரியத்தை அமைக்க பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்…

tamil.oneindia.com

TAGS: