நஜிப் மிகவும் இனவாதியாகியிருக்கிறார், மகாதிர் கூறுகிறார்

don'taccuseநஜிப் ரசாக் ஓர் இனவாதி ஆகியிருக்கிறார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார்.

நஜிப் முஸ்லிம்களை முஸ்லிம்களிடமிருந்தும் முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து பிரிக்கிறார். முதலில், அவர் மலயாக்காரர்களைப் பற்றி கவலைப்பட்டதில்ல. ஆனால், இன்று மிகவும் இனவாதியாகியுள்ள அவர் இஸ்லாமியவாதியும் கூட – The Economist இப்படி எழுதியிருக்கிறது, நானல்ல என்று இன்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, நஜிப் அவரது வலைதளத்தில் ஓர் “ஓய்வு பெற்ற தலைவர்” முஸ்லிம்களைப் பிரிக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்ததற்கு எதிர்வினையாக மகாதிர் இவ்வாறு கூறினார்.