டூபாயிலிருந்து திரும்பிய ஜமால் கேஎல்ஐஏ-இல் கைது

jamalசிவப்புச்  சட்டை   இயக்கத்  தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்,   கைது   செய்யப்பட்டு    நான்கு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டிருப்பதை    அவரின்    செயலாளர்   டூரானி   இஸாம்  உறுதிப்படுத்தினார்.

வெளிநாடு   சென்றிருந்த   ஜமால்   நாடு    திரும்பிய    உடனேயே   விமான  நிலையத்தில்   கைது   செய்யப்பட்டார்.

போலீசார்,   இரண்டு   வாரங்களுக்குமுன்   சாபாக்   பெர்னாமில்     சிவப்புச்  சட்டைக்காரர்களுக்கும்   பெர்சே   5   வாகன   அணி   பங்கேற்பாளர்களுக்குமிடையில்      நிகழ்ந்த   மோதல்   குறித்து    ஜமாலிடம்   வாக்குமூலம்   பதிவு     செய்ய  காத்திருக்கிறார்கள்.

இதனிடையே,  பெர்சே   5  பேரணி   நடைபெறுமானால்     1969   மே  கலவரம்   மீண்டும்   நடக்கும்    என்ற   இணையத்தளப்   பதிவு   குறித்தும்   சுங்கை   புசார்   அம்னோ    தலைவரிடம்   விசாரணை   செய்யப்படும்   என    இன்ஸ்பெக்டர்-ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்  அபு   பக்கார்     அறிவித்துள்ளார்.

ஆனால்,  ஜமால்   தாம்    அப்பதிவை   இடவில்லை   என்று    மறுத்திருக்கிறார்.