குளிர்காலத்தால் எம்எச்370 தேடும் பணி இரண்டு மாதங்கள் தாமதமாகும்

mh 370குளிர்காலத்தில்  இந்தியப்  பெருங்கடலில்    வானிலை    மோசமாக    இருக்கும்     என்பதால்    மலேசிய   விமான   நிறுவனத்தின்   எம்எச்370   விமானத்தைத்   தேடும்   பணி   இரண்டு   மாதங்கள்வரை    தாமதமாகலாம்   என்று   அதிகாரிகள்   அறிவித்துள்ளனர்.

அந்த  போயிங்  777,   2014    மார்ச்   மாதம்   239   பயணிகளுடன்   கோலாலும்பூரிலிருந்து   பெய்ஜிங்   பறந்து  கொண்டிருந்தபோது    மாயமாக   மறைந்தது.  கிட்டத்தட்ட   இரண்டரை   ஆண்டுகளாக    அதைத்   தேடும்  பணி    இந்திய   பெருங்கடலில்    நடைபெற்று   வருகிறது.

120,000  சதுர    கிலோமீட்டர்(46,000  சதுர   மைல்)   பரப்பளவில்   அது   விழுந்திருக்கலாம்   என்று   கணிக்கப்பட்டு   அப்பகுதியில்    தேடும்   பணிகள்   நடந்து   வருகின்றன.  2016  இறுதிக்குள்   தேடும்   பணியை    முடித்துக்கொள்ளலாம்    என   மலேசியா,  ஆஸ்திரேலியா,   சீனா   ஆகிய   நாடுகளின்   அதிகாரிகள்   திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், “தென்    மண்டலத்தில்   வானிலை    மோசமாக   இருப்பதால்    சம்பந்தப்பட்ட    பகுதி   முழுக்க      தேடி  முடிக்க   2017   ஜனவரி/ பிப்ரவரி   ஆகலாம்”,  என   அவர்களின்   அறிக்கை   ஒன்று   கூறியது.

ஆகாய    விமானப்  போக்குவரத்து   வரலாற்றில்     இதுவே    செலவுமிக்க  தேடலாக    அமைந்துள்ளது.   இதுவரை   110,000   சதுர  கிலோமீட்டரில் (42,500 சதுர  மைல்)   தேடும்  பணியை   முடித்துக்   கொண்டிருக்கிறார்கள்.