பிரச்சனைகள் கொண்ட எதிர்க்கட்சிகள் மஇகாவின் இடத்தை நிரப்புமா?

pakatanவணக்கம்,  கா.ஆறுமுகம் அவர்களே. அரசியல் விமர்சனம் என்பது பொதுவாகவும் பொதுநலனுக்காவும் சமூக நலன் கருதியும் எழுதப்பட ண்டும்.

ஆளும்கட்சிக்கு இருக்கும் பலவீனங்களையும்,அதில் இருக்கும் இந்தியப் பிரதிநிதி மஇகாவை குறைகாண்பதில் குற்றமேதும் காண நான் விரும்பவில்லை.

எனது கேள்விக்கு தாங்கள் கண்டிப்பாக நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.மஇ காவை கை விடுவோம்,வெறுப்போம், இது உங்கள் பிரச்சாரங்களில் ஒன்று,சரி மஇகாவுக்கு மாற்று எது ? எதிர்க்கட்சியா?

மத்திய அரசாங்கமும் மஇகாவும் இந்திய மக்களை பூசிமொழுகுகிறார்கள் என்றால் ,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாழும் இந்திய மக்களுக்கு எதிர்க்கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? அவற்றை உடனடியாக பட்டியலிட்டு எனக்கு விளக்கி கூறுங்கள்.

நான் மிகவும் ஆவலாகா இருக்கிறேன் உங்களின் பதிலுக்கு. எனக்காக இல்லை,  இந்திய மக்களுக்காக கேட்கிறேன்,மஇ காவுக்கு மாற்று எது எதிர்க்கட்சியா?

உங்கள் கட்டுரைகள் எதிர்கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறது என்றால் நீங்கள் எதிர்கட்சிக்கு ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே, எதிர்க்கட்சியில் இருக்கும் பலவீனத்தையும் தைரியமாக சுட்டிகாட்டுங்கள், எதிர்க்கட்சி முதல்வர்கள் அரசியல் சண்டையிடுவதிலே நேரத்தை செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு மக்களின் மீது என்ன கவலை இருக்குமோ என்ற அச்சம்தான் மத்தியில் ஆளும் கட்சிக்கு அடுத்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை தேடி தர போகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?

மாற்றம் வேண்டும் என்று இருந்த மக்களின் மனதில் எதிர்க்கட்சிகள் மீது இருந்த நம்பிக்கை ,தற்பொழுது ஆளும்கட்சியின் மீது திரும்பி இருக்கிறது என்பதை ஒருகருத்து கணிப்பை நடத்திவிட்டு உங்கள் கட்டுரையில் மஇகாவுக்கு மாற்று எது என்பதையும், மத்தியில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களை பிரதிநிதிக்க போகும் கட்சி எது என்பதை சொல்லுங்கள் .சீனர்களுக்கு டி ஏ பி ,மலாய்காரர்களுக்கு சொல்லலேவே வேண்டாம், தமிழனின் பிரதிநிதி எது ?

சும்மா எதிர்கட்சிக்கு ஆதரவாளர் என்பதால் அதுவும் சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் நீங்கள் அதுவும் டத்தறான் மெண்டாரி ரெஸ்டாரன் சுபைடாவில் காலையில் தேனீர் அருந்தும் திரு கா ஆறுமுகம் அவர்களே,வாருங்கள் டேசா மென்டாரி பக்கம் வந்து உங்களுடைய கருத்து கணிப்பை நடத்துங்கள், மஇகாவா எதிர்க்கட்சியா என்றால் ….சிலாங்கூர் மாநில இந்திய மக்களின் வாழ்வாதாரம் சிரியாய் சிரிப்பதை பார்ப்பீர்கள்.

தீபாவளிக்கு ஐந்து கிலோ அரிசியோடு வரும் எதிர்க்கட்சிகள் அடுத்த தீபாவளிக்கு எட்டிப்பார்க்கும் கதைகளும் உங்கள் காதில் விழும் ,அதை வாங்குவதற்கு கை ஏந்தும் இந்திய குடும்பம் இன்னும் வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறது .நன்றி .அரசியல் என்பது சாக்கடைதான் அங்கு மஇ கா இருந்தால் என்ன எதிர்க்கட்சி இருந்தால் என்ன எல்லாம் பதவி மோகமும் சுயநலமும் என்பதை புரிந்து கொள்பர்கள் புரிந்து கொள்வார்கள் நீங்களும்தான். – இந்திய சமுதாயத்தில் இருந்து ஒரு குரல்

(குறிப்பு – விமர்சன கண்ணோட்டத்துடன் கருத்துகளை தந்த குரலுக்கு நன்றி – கா. ஆறுமுகம்)