பெர்சே 5 ஏற்பாட்டாளர்களையும் நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும்

mpசிவப்புச்   சட்டை  இயக்கத்    தலைவர்       ஜமால்   முகம்மட்  யூனுஸ்    கைது   செய்யப்பட்டதைப்  போல்   பெர்சே   5  ஏற்பாட்டாளர்களையும்   தேசிய   நிந்தனைச்    சட்டத்தின்கீழ்   விசாரிக்க   வேண்டும்    என்று   அம்னோ   எம்பி  ஒருவர்   கூறியுள்ளார்.

தேர்தல்   கண்காணிப்பு   அமைப்பான   பெர்சே   “அரசாங்கத்தை   வெறுப்பதற்கு   மக்களைத்   தூண்டி  விடுவது”  தெள்ளத்   தெளிவாக    தெரிந்த   ஒரு   விசயம்தான்   என    கோலா  சிலாங்கூர்    எம்பியான   இர்மோகிஸாம்   இப்ராகிம்    கூறினார்.

“மக்களைப்   பிளவுபடுத்தி     நாட்டின்   அமைதியைக்  கெடுக்கும்   சம்பவங்களை    நிறைய   நாம்   பார்க்கப்   போகிறோம்..

“பெர்சே,   எதிரணியினரின்    அரசியல்   ஆட்டங்களுக்கு   ஓர்   ஊடகமாக   விளங்குகிறது”, என்றவர்  ஓர்    அறிக்கையில்   தெரிவித்தார்.