ஐஜிபி: பெர்சேமீது போர் என்று ஜமால் அறிவித்திருப்பது ‘வெறும் வாய்ச்சொல்தான்’

igpசிவப்புச்  சட்டை   இயக்கத்   தலைவர்   ஜமால்   முகம்மட்   யூனுஸ்,  பெர்சேமீது   போர்   தொடுக்கப்போவதாக     அறிவித்திருப்பதை     “வெறும்   வாய்ச்சொல்”தான்   என்று  நினைக்கிறார்   இஸ்பெக்டர்  ஜெனரல்  அப்   போலீஸ்  காலிட்  அபு   பக்கார்.

அதை  ஒரு  அச்சுறுத்தல்    என்று   நினைப்போர்   தாராளமாக    போலீசில்   புகார்   செய்யலாம்   என்றார்.

“அதை  எப்படி  எடுத்துக்கொள்கிறோம்   என்பதைப்  பொறுத்துள்ளது. வாய்ச்  சொல்லுக்க்கு  வாய்ச்  சொல்லாலேயே    பதில்கூறி   விடலாம்”,  என  காலிட்   கூறினார்.

நேற்று   போலீஸ்   காவலிலிருந்து   விடுவிக்கப்பட்ட   ஜமால்,   பெர்சேயைத்   தாக்குவதற்கு    நாடு  முழுவதிலுமிருந்து    ஆள்களைத்   திரட்டப்போவதாக    அறிவித்திருந்தார்.

ஜாமாலை   இரண்டு-நாள்    காவலில்  வைப்பதாகக்  கூறிவிட்டு   முன்கூட்டியே   விடுவித்தது    ஏன்   என்று   காலிட்டிடம்   வினவப்பட்டது.

போலீசார்  விசாரணையை   முடித்து   விட்டார்கள்.  அதனால்   அவரை  மேலும்   காவலில்   வைத்திருக்க   வேண்டிய    அவசியமில்லை  எனப்   பதிலிறுத்தார்    அவர்.