பாஸ்: பெர்சே போராட்டம் திசைமாறி விட்டது

takiyudinபெர்சே   5 ஏற்பாட்டாளர்கள்   பெர்சே  எந்த   நோக்கத்துக்காக   போராட்டத்தைத்   தொடங்கியதோ   அந்த   நோக்கத்திலிருந்து   திசைமாறிப்  போய்   விட்டதாக   பாஸ்  கட்சி   கூறியது.

பெர்சே  4  பேரணியின்போது   பேரணி    பங்கேற்பாளர்கள்      தேசியத்    தலைவர்களின்   உருவப்படங்களைக்  காலால்   மிதித்ததை   எண்ணி   பாஸ்   வெறுப்படைவதாக    அக்கட்சித்   தலைமைச்   செயலாளர்   தகியுடின்    ஹசான்   கூறினார்.

“மூல   நோக்கத்திலிருந்து   போராட்டம்   திசைமாறிப்   போனதுடன்    கடந்த   முறை,   பெர்சே   4    பங்கேற்பாளர்கள்    நாட்டின்   உயர்த்   தலைவர்களின்   படங்களைத்    தரையில்போட்டுக்   காலால்    மிதித்தார்கள்.  அது   ஏற்றுக்கொள்ள  முடியாத   ஒரு   செயல்”,  என்றாரவர்.

பெர்சே  5  கூட்டத்துக்கு   பாஸ்   அழைக்கப்பட்டதாகவும்   ஆனால்,   அதில்  கலந்துகொள்ள  விருப்பமில்லை   என்பதை    பாஸ்    பேரணி   ஏற்பாட்டாளர்களிடம்    தெரிவித்து   விட்டதாகவும்    தகியுடின்    கூறினார்.