பட்ஜெட்டில் பாலர் பள்ளிகளுக்கு ரிம 10 மில்லியன் மட்டுமே! – கா. ஆறுமுகம்

Preschool2அடுத்த ஆண்டு சனவரியில் இந்தியர்களுக்குக்காக ஒரு விசேச திட்ட வரைவு ஒன்றை அறிவிக்கப் போவதாக பிரதமர் சொன்னதில் எனக்கு சற்று அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதன் தாக்கம் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளதும், மோசமாக்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம்.

bajet Indiaஇருப்பினும், இந்தியர்களுக்காக சுமார் ரிம260 மில்லியன் ஒதுக்கியுள்ளது அழுகின்ற குழந்தைக்கு கிடைத்த மிட்டாய் என சற்று ஆறுதல் அடையலாம். இதில் தெக்குன் (50 மில்லியன்) மற்றும் அமனா இக்தியார் (100 மில்லியன்) வழி ரிம150 மில்லியனை  ஒதுக்கீடு செய்திருப்பது சந்தேகத்தை உருவாக்குகிறது. இவை இந்தியர்களின் சிறுதொழில் மேம்பாட்டுக்கு எவ்வகையில் உதவும் என்பது தெளிவாக இல்லை. மேலும் B40 எனப்படும் 40 சதவிகித கீழ்மட்ட இந்தியர்கள் இதன் வழி பயன் பெற இயலுமா? கடன் கொடுத்து மேலும் இந்தியர்களை கடனாளியாக ஆக்கும் திட்டமாக இது?    இல்லாமல்  இருந்தால் சரி.

பாலர் பள்ளிக்கு தேசிய நிலையில் பயிலும் சுமார் 200,000 குழந்தைகள் பயன்பெற ரிம132 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் இந்தியக்   குழந்தைகள்  பயன் பெறுவதை நமது பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும்.

kamalanathanதமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வழி 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளிகள் நிறுவகிக்கப்படும் என தெரிகிறது. இந்த வருடம் செடிக் நிதி ஒதுக்கீட்டின் வழி சுமார் 50க்கு அதிகமான பாலர்  பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை முறைப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புக்கு மாற்றப்பட வேண்டும். இதில் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களை அரசாங்க ஊழியர்களாக ஆக்க வேண்டும்.

இந்தப் பணியை கல்வி அமைச்சு மேற்கொண்டு அதன் வழி இந்த ரிம10 மில்லியனை தரமான 50 பாலர்  பள்ளிகள் உருவாக்கம் காண வேண்டும். இந்த ஒதுக்கீடு சார்பாக துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இந்த ரிம10 மில்லியன் தனது அமைச்சின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2020 ஆண்டுக்குள் நூறு சதவிகித பாலர் கல்வியை இந்தியச் சமூகம் பெற இயலாது. அதற்கு ஏற்ற ஒதுக்கீட்டை இந்த பட்ஜெட்டில் காணவில்லை. இருப்பினும் ஒதுக்கப்பட்டுள்ளதை கல்வி அமைச்சு பொறுப்புடன் கையாள வேண்டும். 2017-இல் 50 புதிய பாலர் பள்ளிகள் தமிழ்ப்பப்பள்ளிகளில் அரசாங்க பாலர் பள்ளிகளாகச்  செயல்பட வேண்டும். துடிப்புடன் செயல் படும் கமலநாதன் இதை உறுதி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.