பெர்சே ஏற்பாதரவாளர்களை அரசாங்கம் கருப்புப் பட்டியலில் போட வேண்டும், உத்துசான் மலேசியா

 

utusanbersihதேர்தல் சீர்திருத்தம் கோரும் பெர்சேயிக்கு நிதி உதவி அளிக்கும் வணிகங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உத்துசான் மலேசியா புத்ராஜெயாவை கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று அவாங் செலமாட் எழுதியுள்ள கட்டுரையில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை அகற்ற முயற்சிக்கும் ஓர் அமைப்பை வணிகங்கள் ஆதரிப்பது தவறாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பெர்சே கூட்டங்களுக்கு ஏற்பாதரவு அளிக்கும் வணிகங்களுடன் வியாபாரத் தொடர்புகள் வைத்திருப்பது மற்றும் நிறுவனங்களுக்கு குத்தைகள் கொடுத்தல் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனை அவாங்கால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மூத்த ஆசிரியர் குழு புனைப் பெயரில் எழுதுகிறது. முறைப்படி, இந்த பெர்சே ஆதரவு நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று அக்கட்டுரை மேலும் கூறுகிறது.

இப்போது என்ன நடக்கிறது என்றால் (புத்ராஜெயா) இக்குற்றவாளி தரப்பினருக்கு அதிகாரங்களைக் கொடுக்கிறது என்கிறது அக்கட்டுரை.