சித்தி காசிமும் நண்பர்களும் ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

kassimவழக்குரைஞர்   சித்தி  காசிமும்    ஐந்து   நண்பர்களும்    பாஸ்   கட்சித்   தலைவர்   அப்துல்   ஹாடி   ஆவாங்கின்   ‘ஹுடுட்’  தீர்மானத்துக்கு   எதிர்ப்புத்    தெரிவிப்பதற்கு   இன்று   நாடாளுமன்றத்துக்கு  வெளியில்    கூடினர்.

அக்குழுவினர்   “சட்டம்  355-ஐ  நிராகரிப்பீர்.  நான்  ஒரு  முஸ்லிம்.  ஆனால்   அதை   நான்   ஆதரிக்கவில்லை”  என்ற  வாசகங்களைக்  கொண்ட     அற்விப்பு    அட்டைகளை       ஏந்தியிருந்தனர்.

“நாங்கள்   அக்கறையுள்ள   குடிமக்கள்.  ஹாடியிடம்   ஏமாறாத   மலாய்க்காரர்களும்  உண்டு   என்பதை    எம்பிகளுக்கு   உணர்த்தவே   வந்திருக்கிறோம்”,  என  காசிம்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

ஷியாரியா  நீதிமன்றச்   சட்டத்தில்   திருத்தம்   செய்வதற்காக  ஹாடி   கொண்டுவரும்   தீர்மானம்   இன்றைய   நாடாளுமன்ற    நிகழ்ச்சி  நிரலில்    ஐந்தாவது   இடத்தில்   உள்ளது.

அத்தீர்மானத்தைக்  குறைகூறுவோர்   அது   ஹுடுட்   சட்டத்தின்   அமலாக்கத்திற்கு   வழிகோலலாம்   என்று   அஞ்சுகின்றனர்.