பெர்சத்து அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்க எதிரணியினர் இடங்கொடுக்க மாட்டார்கள்

umnoபொதுத்   தேர்தலில்   எதிரணி  வெற்றி  பெற்றாலும்   பார்டி   பிரிபூமி    பெர்சத்து    மலேசியா(பெர்சத்து)வால்    அம்னோவைப்  போல்   அரசாங்கத்தை     வழிநடத்த   இயலாது.

ஏனென்றால்  முகைதின்  யாசின்   தலைவராகவுள்ள   பெர்சத்து   அரசாங்கத்தை   அமைக்கும்   அளவுக்கு   பெரும்பான்மையைப்  பெற்றிருக்காது   என்கிறார்    அம்னோ   தகவல்    தலைவர்    அனுவார்   மூசா.   அவ்வளவு  ஏன்   அது,     அடுத்த   பொதுத்    தேர்தலில்      விரும்பும்   இடங்களில்   போட்டியிட    மற்ற  எதிர்க்கட்சிகள்   அனுமதிக்குமா   என்பதுகூட   சந்தேகம்தான்.

“முகைதின்    அவரது  கட்சி   அம்னோவுக்கு   மாற்றாக   இருக்கும்    என்று   கூறியுள்ளார்.  அம்னோவின்   இடத்தைப்  பெற  விரும்பினால்   (அடுத்த  பொதுத்   தேர்தலில்)    எத்தனை   இடங்களில்    அவர்கள்   போட்டியிடப்  போகிறார்கள்…….அதற்கு   டிஏபி,   அமனா,    பிகேஆர்,   பாஸ்   இடமளிக்குமா,  ஒருக்காலும்  மாட்டா”,  என்றாரவர்.