மந்த போக்கை கடைபிடிக்கும் இலங்கை அரசு – கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள்

tamilஇலங்கையில் தமிழர்கள் பகுதியில் சமாதான நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இது குறித்து இலங்கை மக்கள் கடும் அவநம்பிக்கையிலும், அதிருப்தியிலும் இருந்து வருவதாக பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் குழு தெரிவித்துள்ளது.

உலக தமிழ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் கூறும்போது, “வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இராணுவமற்ற பிரதேசமாக மாற்றுவதிலும் இயல்பு வாழ்க்கையை மீட்டுத்தருவதிலும் இலங்கை அரசு எந்தவித துரிதச் செயல்பாடும் இல்லாமல் மந்தமாக உள்ளது.

மேலும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து சமாதானமாக வாழும் முயற்சிகளிலும் இலங்கை அரசிடம் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

இவை குறித்து அரசியல் தலைவர்களிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான, கலவையான கூற்றுகளே வெளிவருவதால் தமிழ் மக்களிடையே மீண்டும் அவநம்பிக்கையும், அதிருப்தியும் உருவாகியுள்ளது.

எனவே இந்த அதிருப்தியைப் போக்க அரசு விரைந்து செயல்படுதல் அவசியம்.” என்று கூறியுள்ளது. சிறுபான்மையினர் விவகாரங்கள் குறித்த ஐநா சிறப்புத் தூதரின் கருத்துகள் இங்கு முக்கியமானவை என்று இந்தக் குழு கருதுகிறது.

அதாவது இனக்குழுக்களிடையே சமாதான கூட்டு வாழ்வு, நன்கு திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட உண்மை, நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றுடன் கூடிய குணப்படுத்தும் நடைமுறை அவசியம் என்று ஐநா சிறப்புத் தூதர் கூற்றை இந்தக் குழு மீண்டும் எதிரொலித்துள்ளது.

“குறிப்பாக ஐநா சிறப்புத் தூதர் பரிந்துரைக்கும் மிகவும் உணர்வு பூர்வமான விவகாரங்களான காணாமல் போன நபர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளித்தல், பாதுகாப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல், ராணுவத்தை வாபஸ் பெறுதல் போன்றவை மிகவும் அவசியமானவை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறி இலங்கை அரசிடம் இந்த விவகாரங்கள் அவசரமானவை என்று முறையீடு செய்துள்ளது

சிறிசேன அதிபராக பதவியேற்ற பிறகு தமிழர்களுக்காக சில நன்மைகளை அறிவித்தார், ஆனால் அதில் அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது அவரது சமாதான நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் மத்தியில் அவநம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் இந்த பிரிட்டன் புலம்பெயர்ந்தோர் குழு தெரிவிக்கிறது.

– Thehindu

TAGS: