அன்வார் இப்ராகிம் ரிம100,000 கொடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

anwarவெளியுறவு    அமைச்சர்    அனிபா   அமினுக்கு   எதிரான    அவதூறு   வழக்கு   தொடர்பில்   முன்னாள்    எதிரணித்    தலைவர்   அன்வார்   இப்ராகிம்    செய்திருந்த   மேல்முறையீட்டைத்    தள்ளுபடி  செய்த     முறையீட்டு   நீதிமன்றம்    வழக்குச்  செலவாக   ரிம100,000   கொடுக்கும்படியும்  அவருக்கு   உத்தரவிட்டது.

அம்முறையீட்டை   விசாரித்த   மூவரடங்கிய   நீதிபதிகள்   குழுவுக்குத்    தலைமை    தாங்கிய     நீதிபதி   உமி    கல்சோம்   அப்துல்   மஜிட்,  “செலவுத்தொகயுடன்   வழக்கு    தள்ளுபடி   செய்யப்படுகிறது”   என்று   தீர்ப்பளித்தார்.