தென்காசியில் நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு

muligaiநெல்லை மாவட்டம், தென்காசி அருகே குத்துக்கல் வளசை பக்கம் உள்ளது அழகப்பபுரம் கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதம் முன்பு தென்காசியில் உள்ள மலையான்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் முத்துப்பாண்டி என்பவர் சென்றுள்ளார். தன்னை நாட்டு வைத்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், குண்டாக இருக்கும் மனிதர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதற்கு தான் தயாரித்த மருந்தை உட்கொண்டால் நீரிழிவு நோய் குணமாகும் என்று கூறியுள்ளார்.

அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் தோப்பில் வைத்தியர் முத்துப்பாண்டி அந்த கிராமத்தின் சாமிநாதன், பாலசுப்பிரமணியன், இருளாண்டி, சவுந்திரபாண்டி ஆகியோரிடம் நீரிழிவு நோய்க்கான மருந்தை கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் முதலில் நீங்க சாப்பிடுங்க என்று சொல்லியுள்ளனர். அப்போது வைத்தியர் முத்துப்பாண்டி மருந்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மற்ற 4 பேரும் அந்த மருந்தை அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் முத்துப்பாண்டி மயங்கி விழ பதறிபோன கிராமத்தினர் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருளாண்டி, பாலசுப்பிரமணியமும் மயங்கி விழ அவர்களையும் அதே மருத்த்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் இவர்கள் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமிநாதனை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சவுந்திரபாண்டியன் தோப்பில் உயிரிழந்ததும் அவரது உடலை குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். பிரேத பரிசோதனையில் உடலை அறுப்பார்கள் என்பதால் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த தென்காசி போலீசார் விசாரணைக்காக அங்கு சென்றுள்ளனர்.

செய்தி: பரமசிவம்

படங்கள் : ராம்குமார்

-http://nakkheeran.in

TAGS: