நஜிப் பட்ஜெட் விவாதத்துக்குக் காத்திருக்கவில்லை

najibபிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்    இன்று   நாடாளுமன்றத்தில்     பட்ஜெட்    மீதான   விவாதம்  தொடங்கும்வரை   காத்திருக்கவில்லை.    அமைச்சர்களின்   கேள்வி   நேரத்தில்   சில   கேள்விகளுக்குப்   பதிலளித்த   பின்னர்   புறப்பட்டுச்   சென்று   விட்டார்.

ஜோகூர்    பாரு   சுல்தானா   அமினா   மருத்துவமனை     தீ  விபத்து    அதற்கு   ஒரு   காரணமாக   இருக்கலாம்.

ஆனால்.  கடந்த  காலத்திலிருந்து   பார்த்தால்   பிரதமர்  ஒன்றிரண்டு   கேள்விகளுக்குப்    பதிலளித்த   பிறகு   அவையில்    இருப்பதில்லை.

ஈராண்டுகளுக்கு  முன்னர்   பக்ரி   எம்பி,   எர்   டெக்   ஹுவா   ஒரு   புள்ளிவிவரத்தைக்   காண்பித்தார்.  நஜிப்  பிரதமரான   2009-இலிருந்து   2014   ஜூன்  17வரை   358  நாள்களில்   26   நாள்கள்தாம்   நாடாளுமன்றத்துக்கு   வந்தாராம்.

இதில்  எந்த   முன்னேற்றமும்   ஏற்பட்டிருப்பட்டிருப்பதாக   தெரியவில்லை.

இன்று  நண்பகல்   12  மணிக்குப்  பிறகு   பட்ஜெட்   மீதான   விவாதம்   தொடங்கியபோது   அவையில்  30  எம்பிகளுக்கும்   குறைவாகத்தான்   இருந்தார்கள்.

அமைச்சர்களோ   துணை    அமைச்சர்களோ  இல்லை.

இரண்டு   வாரங்களுக்கு   நீடிக்கும்    வரவு-செலவு   மீதான   விவாதங்களில்   பெரும்பாலும்    இப்படித்தான்.  அமைச்சின்   அதிகாரிகள்   அங்கிருப்பார்கள்.  விவாதங்களைக்   குறிப்பெடுத்துக்    கொள்வார்கள்.

பட்ஜெட்  விவாதத்தின்போது    அமைச்சர்களும்    அவையில்   இருக்க    வேண்டாமா    என்று   அவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்   மூலியாவிடம்    கேட்டதற்கு,  “அதை   நீங்கள்   அவர்களிடம்தான்  கேட்க    வேண்டும்”,  என்றார்.