மீண்டும் யாழில் தலை தூக்கும் பொலிஸாரின் தாக்குதல்: இளைஞர்கள் மத்தியில் பதற்றம்

yaazh1யாழ். கோப்பாய் டிப்போவிற்கும் உரும்பிராய் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று காலை 9.00 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின.

ஆஸ்பத்திரி வீதி சங்கானைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸார் தாக்கியுள்ளாதவும்.குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.

முறைப்பாட்டில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும், தாக்கப்பட்டவர்களை கண்டால் அடையாளம்காட்டுவதாகவும் இளைஞர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகிய நிலையில் இவ்வாறான தொரு சம்பவம் நடைபெற வில்லை என்றும் மாற்றுக் கருத்துகள் கூறப்பட்டது.

இதேவேளை, இந்த சம்பவம் முதலில் நடைபெற்றிருக்கலாம் அல்லது நடைபெறாமல் சென்றிருக்கலாம் ஆனாலும் இடம் பெறாத சம்பவம் வெளிவராது என்பதே உண்மை.

மேலும், பொலிஸாரின் அடாவடித்தனம் யாழில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் இளைஞர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் அதனைத் தொடர்ந்து பொலிசார் மீது வாள்வெட்டுகளும் நடந்தேறியது. அடுத்தது என்ன நிகழும் என்பது அறிந்து கொள்ள முடியாத வகையில் யாழ் பதற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களை பொலிஸார் அச்சுறுத்தியதாகவும் கொழும்பு ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளிவந்தன.

மேற்குறிப்பிட்ட சம்பவமும் இடம் பெற்றிருக்க முடியும் காரணம் யாழில் தற்போது தோன்றும் பதற்ற நிலையே. அடுத்தடுத்து வரும் சம்பவங்கள் காரணமாக கலவரபூமியாக மாற்றப்படக்கூடாது என்ற காரணத்திற்காக அந்த சம்பவம் மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாக யாழ் இளைஞர்கள் மத்தியில் பதற்றம் காணப்பட்டு கொண்டே வருகின்றது. ஆர்ப்பாட்டங்கள் நீதிக்காக இடம் பெற்று கொண்டிருக்கும் போதும் மறு பக்கம் அதிரடி பொலிஸாரின் பாதுகாப்பும் யாழிற்கு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் யாழின் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு வரும் சில சதியாளர்களின் திட்டம் முறியடித்து யாழில் அமைதி நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பது தற்போது மிக முக்கியமாகும்.

-http://www.tamilwin.com

TAGS: