6,000-க்கு மேற்பட்ட ஜிஎல்சி, எம்கேடி ஊழியர்கள் இவ்வாண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்

glcஅரசாங்கத்   தொடர்பு   நிறுவனங்களிலும் (ஜிஎல்சி)  அரசாங்கத்தின்   துணை  நிறுவங்களிலும்  ஆறாயிரத்துக்கும்   மேற்பட்டோர்   இவ்வாண்டு   வேலை   இழந்தனர்.

இவர்களில்  5134  பேர்   ஜிஎல்சிகளைச்  சேர்ந்தவர்கள்   என  நிதி  அமைச்சு   கூறியது.

மலேசிய   விமான  நிறுவனத்திலிருந்து  4,682  பேர்     பணிநிறுத்தம்    செய்யப்பட்டனர்.  அந்நிறுவனம்  மலேசியா  ஏர்லைன்ஸ்    பெர்ஹாட்(எம்ஏபி)   எனப்  பெயர்மாற்றம்   செய்யப்பட்ட   பின்னர்   மேலும்   இருவர்    விலக்கப்பட்டனர்..

இது  தவிர  ஆள்குறைப்பு   செய்த   மற்ற   ஜிஎல்சிகள்   வருமாறு: அஃப்பின்   குழுமம் (146);  பெளஸ்டட்   ஹொல்டிங்ஸ்  பெர்ஹாட்(151);    கெமிகல்   கம்பெனி    அப்  மலேசியா (153).

நிதி   அமைச்சின்கீழ்  உள்ள   நிறுவனங்களிலிருந்து   1,036   பேர்   பணிநீக்கம்    செய்யப்பட்டனர்.

பெட்ரோனாசிலிருந்து  1,000  பேர்,  அக்ரோபேங்கிலிருந்து   36 பேர்.