மிரட்டிய ரஷ்யா? எல்லையில் பீரங்கிகளுடன் படை வீரர்களை குவித்த பிரித்தானிய அரசு

பிரித்தானிய அரசு ரஷ்யா எல்லைப்பகுதியில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அரசு அண்மையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் படியே விலகியது. இந்நிலையில் ரஷ்யா கடந்த மாதம் அணு வெளியேற்றுதல் சோதனையை மேற்கொண்டது, அது வெற்றிகரமாக முடிந்ததால் இதை மேற்கு நாடுகள் மீது பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று மறைமுகமாக ரஷ்யா தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானதாங்கி போர்கப்பல் ஒன்று கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய கடல் வழியாக சென்றது. இதனால் பிரித்தானிய முழுவதும் உஷார் நிலை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் கூட வான்வழித்தாக்குதலுக்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பான வீடியோ ஒன்றையும் அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இது குறிப்பாக பிரித்தானிய அரசுக்கு எச்சரிக்கை விடுவது போல் இருந்தாக கூறப்பட்டது.

இதன் காரணமாக பிரித்தானிய அரசு எச்சரிக்கையுடன் இருப்பதற்காக ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இராணுவவீரர்களையும், பீரங்கிகளையும் மற்றும் சில பட்டாலியன்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் மைக்கல் ஃபலான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானிய அரசு ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகியதை ரஷ்ய அரசு பலவீனமாக எடுத்து கொள்வதாகவும், துருக்கி அரசு பிரித்தானியாவுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், இதன் காரணமாகக் கூட ரஷ்யாவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படுகிறது.

-http://news.lankasri.com