2040-ல் மலேசிய மக்கள்தொகை 41.5 மில்லியனாகும்

popu2010இல்   28.6  மில்லியனாக   இருந்த   மலேசியாவின்  மக்கள்தொகை    2040இல்  41.5 மில்லியனாக   உயரும்    எனப்  புள்ளிவிவரத்  துறை    கூறியுள்ளது.

பூமிபுத்ராக்களின்   எண்ணிக்கைதான்   அதிகம்   உயரும்   என   எதிர்பார்க்கப்படுகிறது.  2010இல்  67.3 விழுக்காடாக    இருந்த   அவர்களின்   விகிதம்   2040-இல்  72.1  விழுக்காடாக   உயரும்.

புள்ளிவிவரத்துறை    2010இலிருந்து  2040  வரைக்குமான  மக்கள்தொகை   பெருக்கம்  மீதான  ஒரு  கணிப்பைச்   செய்து  அதை   ஓர்      அறிக்கையாக  வெளியிட்டிருக்கிறது.

2010இல்   106  ஆண்களுக்கு   100  பெண்கள்   என்றிருந்த   பாலின    விகிதம்    2020 இல் 108  ஆக  உயரும்.  2040இல்  அதில்    எந்த   மாற்றமும்  இராது.

2020ஆம்   ஆண்டிலேயே   மலேசியாவில்  வயதானவர்கள்  அதிகம்   இருப்பார்கள்.  அப்போது   65வயதைத்   தாண்டியவர்கள்  எண்ணிக்கை   7.2 விழுக்காடாக  உயரும்   என்று   அவ்வறிக்கை   கூறிற்று.