நஜிப்: மகாதிரும் கிட் சியாங்கும் ‘பல்டி-அடிப்பு மன்னர்கள்’

mcaபார்டி   பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து) வும்   பக்கத்தான்   ஹராபானும்   ஆகக்  கடைசியாக    செய்துகொண்டிருக்கும்   ஒப்பந்தம்   எந்த   அளவுக்கு   நேர்மையானது   என்பதைச்    சீனர்   சமூகம்    எண்ணிப்  பார்க்க   வேண்டும்    என்று  பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்     வலியுறுத்தியுள்ளார்.

இன்று   மசீசவின்  63வது    ஆண்டுக்  கூட்டத்தில்   உரையாற்றிய    நஜிப்,  பெர்சத்து    தலைவர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டும்   டிஏபி   நாடாளுமன்றத்   தலைவர்   லிம்   கிட்  சியாங்கும்     செய்து  கொண்ட   ஒத்துழைப்பு   ஒப்பந்தம்   உண்மையானதல்ல    என்றார்.

“எதிரணியின்  கூட்டாண்மை   உண்மையானது   என்றா  நினைக்கிறீர்கள்?   லிம்  உண்மையிலேயே   மகாதிரை   விரும்புகிறார்    என்று   நினைக்கிறீர்களா? மகாதிர்   லிம்மை  உண்மையிலேயே  விரும்புகிறார்   என்று  நினைக்கிறீர்களா?”,  என்று   நஜிப்   வினவ    மசீச    பேராளர்கள்  ஒருமித்து   உரத்த  குரலில்    “இல்லை”  என்றார்கள்.

மகாதிர்  லிம்மை  “இனவாதி,  இஸ்லாத்துக்கு   எதிரி”  என்று   வருணித்துள்ளார்.  லிம்,   முன்னாள்   பிரதமரை    மற்றவற்றோடு  “சர்வாதிகாரி”   என்று  சாடியதுண்டு.

அரசியல்  காரணங்களுக்காக   இப்படி   நடந்து  கோள்வதைத்   தம்மால்   புரிந்து   கொள்ள   முடிகிறது    என்றாலும்  மகாதிருக்கும்   அவரின்   நடப்பு    கூட்டாளிகளுக்குமிடையே   இதுவரை    இருந்து  வந்துள்ள   உறவை    நினைக்கையில்     இந்த   உறவுமுறையை  “கபடத்தனத்தின்  உச்சக்கட்டம்”  என்றுதான்   வருணிக்க   வேண்டும்    என்றார்.

“இதுதான்  பல்டி-அடிப்பு  அரசியல்.  எத்தனை   தடவை  இப்படி    பல்டி   அடித்திருக்கிறார்கள்?”,  என்றார்   நஜிப்.