ஓஎஸ்ஏ-யை மீறிய வழக்கில் ரபிசிக்கு 18 மாதச் சிறைத் தண்டனை

rafiziகோலாலும்பூர்     செஷன்ஸ்    நீதிமன்றம்   பிகேஆர்  உதவித்   தலைவர்    முகம்மட்    ரபிசி   ரம்லி   1972ஆம்  ஆண்டு   அதிகாரத்துவ   இரகசிய   சட்ட (ஓஎஸ்ஏ)த்தை   மீறினார்  என்று   தீர்ப்பளித்து   அவருக்கு   18  மாதச்  சிறைத்  தண்டனை   விதித்தது.

ரபிசி  அனுமதியின்றி    1எம்டிபி  மீதான   அரசாங்கத்   தலைமைக்  கணக்காய்வாளரின்   அறிக்கையின்   98அம்  பக்கத்தைத்   கைவசம்   வைத்திருந்தார்    என்று    அவருக்கு   எதிராகக்   குற்றம்   சாட்டப்பட்டிருந்தது.  அது    ஓஎஸ்ஏ  பிரிவு 8(1) (சி)  (iii)-இன்படி  குற்றமாகும்.

அவர்   மார்ச்  28-இல்,   நாடாளுமன்ற  வளாகத்தில்  அந்த  இரகசிய   ஆவணத்தின்   விவரங்களை   அனுமதியின்றி   வெளிப்படுத்தினார்    என்பது  மற்றொரு  குற்றச்சாட்டு. அது  ஓஎஸ்ஏ  பிரிவு 8(1) (இ) (iv)-இன்படி  குற்றமாகும்.     குற்றவாளி    என்று   தீர்ப்பளிக்கப்பட்டால்    இவ்விரண்டு   குற்றச்சாட்டுகளில்   ஒவ்வொன்றுக்கும்  ஈராண்டுச்  சிறைத்   தண்டனை   விதிப்பதற்கு   சட்டம்  இடமளிக்கிறது.

ரபிசிக்கு  இரண்டு   குற்றங்களுக்கும்  18மாதச்  சிறைத்   தண்டனை  விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க  வேண்டும்   உத்தரவிடப்பட்டது.