சும்மா …!! இதை படியுங்கள் நிச்சயம் அசந்து போவீர்கள் – இது தான் தமிழ்

tamilஉலகில் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போக, தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த பீடிகை தொடர்ந்து படியுங்கள் புரியும்,

சும்மா… சொல்லுவோம் தமிழின் சிறப்பை, அது சரி சும்மா? என்றால் என்ன? அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா. பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இது.

இந்த வார்த்தைக்கு மட்டும் 15 அர்த்தங்கள் உண்டு வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

அமைதியாக – சும்மா (அமைதியாக) இருங்கள் – quiet

களைப்பாறிக்கொண்டு – கொஞ்ச நேரம் சும்மா இருக்கின்றேன் – leisurely

உண்மையில் – சும்மா சொல்லக்கூடாது அருமை – in fact

இலவசமாக – சும்மா ( இலவசமாக) கிடைக்காது – free of cost

பொய் – சும்மா கதை அளக்காதே – lie

உபயோகமற்று – சும்மா தான் இருக்கின்றது எடுத்துக்கொள் – without use

அடிக்கடி – சும்மா சும்மா சீண்டுகின்றான் இவன் – very often

எப்போதும் – இவன் இப்படித்தான் சும்மா ( எப்போதும்) சொல்லுவான் – always

தற்செயலாக – ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன் – just

காலி – இந்த பெட்டி சும்மா தான் இருக்கின்றது – empty

மறுபடியும் – சொன்னதையே சும்மா சொல்லாதே – repeat

ஒன்றுமில்லாமல் – சும்மா ( வெறும்கையோடு) போகக் கூடாது – bare

சோம்பேறித்தனமாக – சும்மா தான் இருக்கின்றோம் – lazily

வீணாக – நான் வெட்டியாக (சும்மா) ஏதாவது உளறுவேன் – idle

விளையாட்டிற்கு – இதை எல்லாமே (விளையாட்டிற்கு) சும்மா தான் சொன்னேன் – just for fun

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த ஒரு சொல் பயன்படுத்தும் இடத்தின்படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து அர்த்தங்களைக் கொடுக்கிறது. சும்மாவாவது சிந்தித்தீர்களா இதனை..??

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

-http://www.tamilwin.com