இலங்கை தூதர் சிக்கலின் கலைமுகிலன்- பாலமுருகன்- ரகுவை காப்பாற்றுவது யார் பொறுப்பு ?

Kalaimugilanஇம்மூன்று தமிழின தியாகிகளுக்கு வரும் 2017 லில் ஜனவரி 23 முதல் 26 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணை. இங்கே தியாகிகள் என்று எழுதக்காரணம் ஏழு நாட்கள் சிப்பான் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது அவர்களின் உறவுகள் பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்தவன் என்பதால் தியாகிகள் என்கிறேன். இனத்துக்கு சிறை போவது எல்லோராலும் முடியாது. முடிந்தவர்களை தியாகிகள் என்பதைத்தவிர வேறு வார்த்தை இல்லை.

தமிழீழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே என்ற மனித கொலைக்காரனை அய்யோக்கியனை இந்த நாடு உள்ளே விட்டதால் வந்த விளைவுதான் இவர்களின் கோபம் விபரீதமானது. சட்டம் பாய்ந்துள்ள விதி என்றும் சொல்லலாம், இது அரசுப்படி நடக்கும் நடவடிக்கைதான். இமூவரும் எதிர்பார்த்த துணிச்சலைத்தான் தியாகம் என்கிறேன்.

சிலர் இவர்களுக்கு கொழுப்பு என்றெல்லாம் பேச கேள்விப்பட்டுள்ளேன். தமிழன் என்ற குருதியில் கலந்த கொழுப்பில் வீரமும் விவேகமும் கோபமும் வருவது எல்லாத்தமிழனுக்கும் வராது.

உலகத்தை உலுக்கிய தமிழீழ உள் நாட்டு தமிழ் இன அழிப்பை போர் என்று உலகத்தரக தலைகள் சொல்வது எத்தகை அறிவிலித்தன புத்தி என்பதை உலகம் அறியும்.
கோபத்தின் விளிம்பில் வார்த்தையின் உச்சத்தில் இலங்கை தூதரை விமான நிலையத்தில் அடித்தது குற்றமா என்றால் அது திட்டமிடா எதார்த்த கோபம்.வார்த்தை விவாதத்தின் கையின் குற்றம்தான்.

3 லட்சம் தமிழீழ இனத்தை கொன்ற கோபம் மலேசியாவில் வீதி முழுக்க பாமரத் தமிழர்களாக எதிர்ப்பு காலத்தில் குதித்த போது எத்தனை அரசியல் தலைவர்கள் உலக மனித உரிமைக்கு ராஜபக்சே வருகையை எதிர்த்தனர், அல்லது நாடவுளுமன்றத்தில் கேள்வி கேட்டனர் ? குறிப்பா PH என்ற எதிர்க்கட்சி கோமாளிகள் ?
அந்த மூவருக்கும் நீதிமன்ற ஜாமீன் தொகை 18 ஆயிரம் கொடுத்து உதவிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை > தமிழின உணர்வாளர்கள் கொடுத்த நிதிதான் இவர்கள் வெளிவர காரணம்.

இப்போது வழக்கரைஞர் நிதியாக 24 ஆயிரம் தேவைப்படுகிறது. இது யார் பொறுப்பு ? அந்த மூவரின் தனிச்சுமையா ?சமூக கடமையா? அல்லது சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பொறுப்பா என்ற ஆர்வத்தில் விடை தேடுகிறோம்.

பெர்சே என்று ஜனநாய போராட்ட கோதாவில் இறங்கிய ஒன்றரை லட்சம் மலேசியர்களின் மனித உரிமை நியாயங்கள் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டமாக முத்திரை குத்தப்பட்டு சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் ஒருவர் குறைந்தபட்சம் 10 ரிங்கிட்டாவது செலவு செய்து இருக்கலாம். மொத்தம் 1 .5 மில்லியன் செலவாகி இருக்கும்.

மலேசியாவில் பெர்சே போராட்டத்துக்கும் தமிழீழ போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு. இரண்டுமே அரசியல், அரசு, ஜனநாயகம், மனித உரிமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பெர்சேவுக்கு தாராள தனிமனித அரசியல் ஆர்ப்பரிப்பு. ஏதோ ஒரு பிரதிபலன் அங்கீகாரம் தமிழீழ அடிக்கு தனிமனித குமுறல் என்பதில் என்ன மனிதம் வடிகிறது என்ற வினாவுக்கு சமூகத்திலிருந்து பதில் வேண்டும்.

உலக மனித இனத்துக்கு ஆபத்து மனிதனால்தான் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனமாக ,,,சமயமாக ,பொருளாதாரமாக , கல்வியாக அல்லது மொழி போராட்டகமாக இருக்கலாம். ஆனால் யாரோ சிலர் பயங்கரவாதியாக, போராளியாக சிறைக்கு போவதும் அவன் குடும்பம் சீரழிவதும் விதியாக சதியாக மதியாக உள்ளது.
குற்றமா என்றால் ? ஜனநாய சட்ட விதி வீதியில் அமைதி ஊர்வலம் நடத்தலாம் என்கிறது. ஆனால் அரசு சிலரை குழப்ப வாதிகள் என்று கைது செய்துள்ளது. இதில் பலர் அரசியலுக்கு ஊக்குவிப்பு தேடும் படலமாக சிலர் உண்மையில் ஜனநாய போராட்ட வாதியாக அரசு சமசீர் உரிமை கேற்பது சவால்மிக்க பெருமைதான்.

இம்மூவரும் சாதார தமிழ் குடும்ப இளைஞர்கள். சட்ட தண்டனை என்பது அது சாதக பாதக ஒரு விதி. ஆனால் இவர்களுக்கு தார்மீக உதவி என்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த ஒன்று என்பதை சமூக வாதிகள் உணர்ந்து மனமுவந்து பணம் தந்து உதவுவது இனத்தின் கட்டாய கடமையாகும்.

1 வெள்ளி கிடைத்தாலும் 30 ஆயிரம் பேர்தான் தான் போதும். ஆனால் ஒருவரே உதவி செய்யும் பெருந்தகைகளை நம்மிடம் உண்டு. மனம்தான் காரணம். கோவிலுக்கும் குலத்துக்கும் கொட்டுவதை நிறுத்தி சமூக தியாகிகளுக்கு உதவ முன் வர அழைக்கிறோம். தொடர்புக்கு நாம் தமிழர் மலேசியா.

தமிழர் தேசியம் மலேசியா –016 6944223