பாஸ்: ஷியாரியா சட்டத் திருத்த விவகாரத்தில் முஸ்லிம்-அல்லாதார் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால்…….

mpஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்)  சட்டம்  1965-இல்   திருத்தம்   செய்வதற்கு   முஸ்லிம்- அல்லாதார்   தொடர்ந்து   எதிர்ப்புத்    தெரிவித்து   வந்தால்   1976ஆம்  ஆண்டு  சட்டச்  சீரமைப்பு (திருமண,  மணவிலக்கு)ச்  சட்டத்தில்   திருத்தங்கள்  கொண்டுவர   முஸ்லிம்களும்   எதிர்ப்புத்   தெரிவிப்பார்கள்   என  பாஸ்   எம்பி   ஒருவர்   எச்சரித்துள்ளார்.

பாஸ்  கட்சித்  தலைவர்  அப்துல்   ஹாடி   ஆவாங்   முன்வைக்கும்   தீர்மானத்தால்  முஸ்லிம்- அல்லாதாருக்குப்   பாதிப்பில்லை  ஆனால்,   முஸ்லிம்-   அல்லாதாருக்கான   திருமணம்,  மணவிலக்கு,   பிள்ளைகள் பராமரிப்புச்  சட்டத்தால்   முஸ்லிம்கள்   பாதிக்கப்படலாம்  என  பாஸ்   தலைமைச்  செயலாளர்   தகியுடின்   ஹசான்   கூறினார்.

பாஸ்   எப்போதுமே   முஸ்லிம்- அல்லாதார்  உரிமைகளுக்கு  மதிப்பளித்து    வந்துள்ளது   என்பதை   வலியுறுத்திய   அவர்,  “இருவருமே    நியாயமாக    நடந்து   கொள்வோம்”  என்று   குறிப்பிட்டார்.

“முஸ்லிம்களின்  உரிமைகளைத்   தொந்திரவு    செய்யாதீர்கள்.  முஸ்லிம்களும்   முஸ்லிம்- அல்லாதாருக்குத்  தொல்லை   தர  மாட்டார்கள்.

“அவர்கள்  எதிர்ப்புத்   தெரிவித்தால்   நாங்களும்   சட்டச்  சீரமைப்பு (திருமண,  மணவிலக்கு)ச்  சட்டத்  திருத்தத்துக்கு   எதிர்ப்புத்   தெரிவிக்க  முடியும்”,  என  கோட்டா  பாரு  எம்பி   கோலாலும்பூரில்    செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.