போலீஸ் மோப்ப நாய்க்கும் பயிற்றுநருக்கும் பாராட்டுப் பதக்கங்கள்

dogசெகாமாட்   மாவட்ட     போலீஸ்     தலைமையகத்தைச்    சேர்ந்த   எட்டு-வயது   மோப்ப     நாய்க்கும்   அதன்  பயிற்றுநரான  லான்ஸ்   கார்ப்பரல்   ஹாடின்   இங்  காங்கும்   பாராட்டுப்   பதக்கங்கள்   வழங்கப்பட்டிருப்பதாக   பிடிஆர்எம்  முகநூல்   பக்கத்தில்   ஒரு   செய்தி    காணப்படுகிறது.

மூராட்   என்ற  அந்த  நாய்,   நவம்பர்  16-இல்    போலீசாரால்   தேடப்பட்டு  வந்த   ‘கேங்  காப்பாக்’   குண்டர்  கும்பல்   உறுப்பினர்கள்   காட்டில்   புகுந்து  மறைந்து  கொண்டபோது   அவர்களில்  இருவரைத்   தேடிக்   கண்டுபிடிக்க    பெரிதும்   உதவியதாம்.

மூராட்டுக்கும்   அதன்  பயிற்றுநருக்கும்   ஜோகூர்   போலீஸ்   தலைவர்   வான்  அஹ்மட்  நஜ்முடின்  முகம்மட்    மாநில  போலீஸ்   தலைமையகத்தில்   அந்தப்  பதக்கங்களை   வழங்கினார்.