நஜிப்: டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரி; இஸ்லாத்துக்கு எதிரி

umnoஇன்று   காலை    அம்னோ  பொதுப்பேரவையைத்    தொடக்கி  வைத்து   உரையாற்றிய   கட்சித்   தலைவர்   நஜிப்   அப்துல்   ரசாக்,    டிஏபி  பூமிபுத்ராக்களுக்கும்    இஸ்லாத்துக்கும்  ஒரு  மிரட்டல்   என்று  குறிப்பிட்டார்.

டிஏபி  ஆட்சிக்கு   வந்தால்   அது   இஸ்லாத்தைச்  “சிறுமைப்படுத்தும்”  என்றாரவர்.

“நாங்கள்   (அம்னோ)  அதை   அனுமதியோம்.

“நாங்கள்  மூண்டெழுந்து   (இஸ்லாத்தைக்)  காப்போம்”,  என  முழக்கமிட்டார்   நஜிப்.

“தாராளமய”   டிஏபி   அதிகாரத்துக்கு    வந்தால்    மலாய்க்காரர்களின்  சலுகைகளும்   மாரா,  பெல்டா,   பெல்க்ரா  போன்ற  அமைப்புகளும்   “அழிந்து  போகும்”.

பூமிபுத்ராக்களுக்கென  சிறப்பாக   உள்ள   மாரா  தொழிநுட்பப்  பல்கலைக்கழகமும்   அது   எந்த  நோக்கத்துக்காக   உருவாக்கப்பட்டதோ   அந்த  நோக்கங்களைத்   தக்க  வைத்துக்கொள்ள  முடியாது”,  என்றாரவர்.

இந்த  அபாயங்களை   உணர்ந்தால்   மலாய்க்காரர்கள்   அம்னோவைத்தான்   ஆதரிப்பார்கள். அம்னோவால்  மட்டுமே    அவர்களின்   எதிர்காலத்துக்கும்   அவர்களின்  பிள்ளைகளின்  பாதுகாப்புக்கும்   உத்தரவாதம்   அளிக்க  முடியும்   என  நஜிப்  கூறினார்.