ஓப்ஸ் வாட்டர் நடவடிக்கையில் எம்ஏசிசி மொத்தம் ரிம114 மில்லியன் ரொக்கத்தையும் சொத்துகளையும் கைப்பற்றியுள்ளது

maccசாபா  நீர் துறை   ஊழல்  தொடர்பில்   மேற்கொள்ளப்பட்ட   ஓப்ஸ்   வாட்டர்  நடவடிக்கைகளில்   மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம்  உள்நாட்டிலும்   வெளிநாட்டிலுமாக    மொத்தம்  ரிம114.5   மில்லியன்  ரொக்கத்தையும்   அசையும்      அசையா   சொத்துகளையும்  கைப்பற்றியுள்ளது.

அந்த  நடவடிக்கைகள்   இறுதிக்  கட்டத்தை  எட்டியிருப்பதாக   அறிவித்தபோது    எம்ஏசிசி    இதைத்   தெரிவித்தது.

“எம்ஏசிசி   அதன்  விசாரணைகளை  விரைவில்   முடித்துக்கொள்ள  முடியும்    என  நினைக்கிறது.  அதன்  பின்னர்  விசாரணை     அறிக்கை     சட்டத்துறைத்     தலைவர்  அலுவலகத்திடம்  ஒப்படைக்கப்படும்”,  என  நடவடிக்கைகளுக்கான  துணைத்   தலைமை   ஆணையர்   அஸாம்  பாகி   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

பணம்,  சொத்துகள்  கைப்பற்றியது  போக   ஒரு  இயக்குனர்,  இரண்டு   துணை  இயக்குனர்கள்   உள்பட    28 பேர்  விசாரணைக்காக    தடுத்து   வைக்கப்பட்டனர்.