நஜிப்பின் பேச்சு இனப் பேரிடருக்கு வழிகோலும்: சைபுடின் தாக்கு

saiநேற்று  அம்னோ  பொதுப்பேரவையில்    அம்னோ   தலைவர்    நஜிப்  அப்துல்  ஆற்றிய   உரை  இனப்  பேராபத்தை   உண்டு  பண்ணும்  வகையில்   அமைந்திருந்தது  என  முன்னாள்   கல்வித்  துணை   அமைச்சர்    கூறினார்.

அப்படி  ஓர்  உரையாற்றிய   நஜிப்பை  முன்னாள்   அம்னோ   எம்பியும்   இப்போது    பக்கத்தான்   ஹராபானின்   தலைமைச்   செயலாளருமான   சைபுடின்   அப்துல்லா    சாடினார்.

“எந்த  ஒரு  பிரதமரும்  இனப்    பேரிடருக்கு   இட்டுச்  செல்லக்கூடிய   இப்படி  ஒரு   தவற்றைச்  செய்யக்  கூடாது”,  என  சைபுடின்   மலேசியாகினிக்கு  அனுப்பிய   குறுஞ்செய்தியில்   குறிப்பிட்டிருந்தார்.

“முதலாவதாக,  டிஏபி   மலாய்க்காரர்களுக்கு   எதிரி,  இஸ்லாத்துக்கு    எதிரி   என்று   ஒரு   ஆதாரமற்ற  குற்றச்சாட்டை  அவர்   சுமத்தினார்.

“இரண்டாவதாக,  ஹராபானில்  எதைச்  செய்யலாம்,  செய்யக்கூடாது  என்பதை  டிஏபி   தீர்மானிப்பதில்லை.  அதில்  எந்தவொரு  கட்சிக்கும்  தனி  அதிகாரம்  இல்லை,   கூட்டாகத்தான்  முடிவு  செய்கிறோம்”,  என  சைபுடின்  கூறினார்.

நேற்று  அம்னோ   பேரவையில்   ஆற்றிய   அரசியல்  உரையில்     டிஏபியை   இஸ்லாத்துக்கும்  பூமிபுத்ராக்களுக்கும்   எதிரியாகச்    சித்திரித்துக்  காட்டிய  நஜிப்,     டிஏபி  ஆட்சிக்கு   வந்தால்    இஸ்லாத்தையும்   பூமிபுத்ராக்களையும்   ஓரங்கட்டிவிடும்   என்றும்  குறிப்பிட்டிருந்தார்.