கருணாவின் கைதால் புலிகளின் முக்கிய தலைவர்கள் இரகசியம் வெளிவருமா?

karuna_amman_002தற்போது இலங்கையில் கருணாவின் கைது தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பு முனையாகவே இந்த கைது அமைந்துள்ளது எனலாம். இலங்கை மக்களும் ஏன் சர்வதேசமும் கூட இவ்வாறானதொரு கைதினை எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனாலும் சாதூரியம் மிக்க இந்தக் கைதின் பின்னணி அனைத்து வகையிலும் மஹிந்தவை அடக்க அரசு எடுத்த ஆயுதமாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை தற்போதைய சூழலில் விடுதலைப்புலிகள் பற்றி பல்வேறு வகையிலும் விமர்சித்து வந்த ஒரு சில தரப்பினர் தற்போது அதனை விடுத்து புலிகளை பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம் வழமைக்கு மாறாக இந்த முறை மாவீரர் தினத்திற்கும் அரசு கடும் எதிர்ப்புகள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.

குறிப்பாக விடுதலைப்புலிகள் மீதான யுத்தத்தில் பங்கு பற்றிய முக்கியஸ்தர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றியும் புலிகள் பற்றியும் நற்கருத்துகளையே வெளியிட்டு வருகின்றனர்.

ஆனாலும் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இது வரையில் எவருமே வெளிப்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் தாண்டி எழுப்பப்படும் கேள்விகளுக்கு போர்குற்றம் தொடர்பில் வெளிப்படுத்த மாட்டோம், காட்டிக்கொடுக்க மாட்டோம் என்ற பதில்கள் மட்டுமே வந்தன.

ஆனாலும் நல்லாட்சி அரசு இப்போதைய சூழ்நிலையில் இவற்றினை வெளிப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் மஹிந்தவாக இருக்கட்டும் கோத்தபாயவாக இருக்கட்டும் காமால் குணரத்னவாக இருக்கட்டும் அனைவருமே விடுதலைப்புலிகள் பற்றி வெளிப்படையாக கருத்து கூறுவதை தவிர்த்திருந்தனர்.

இங்கு அரசு தரப்பும் மௌனம் காத்து வரும்போதே பசில் ராஜபக்ச “இப்போதைய அரசு பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் கொடுக்கலாம்” என்ற ஓர் சர்ச்சைக்குரிய கருத்தினையும் முன்வைத்திருந்தார்.

அதனைப்போன்று போரில் அங்கம் வகித்த அனைவருமே போர் வெற்றியை ஒருவர் மீது ஒருவர் சுமத்தி கொண்டு வந்தனர்.

குறிப்பாக கடைசி தருணத்தில் சரணடைந்த மற்றும் இறுதி யுத்தத்தில் பங்கு கொண்ட புலிகளின் முக்கிய தலைவர்கள் பற்றி 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பிரம்ம இரகசியமாகவே காக்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று “விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிருடன் இருந்தால் தாராளமாக வெளி வரலாம்” என்ற ஓர் கருத்தும் தென்னிலங்கையில் அண்மையில் கூறப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

கருணாவைத் தொடர்ந்து கமால் குணரத்னவிற்கும் கைது ஆபத்து இருக்கத்தான் செய்கின்றது. இவர்கள் இருவரும் போரில் முக்கிய அங்கங்கள் என்பது வெளிப்படை.

இந்த நிலையில் இறுதி யுத்தம் தொடர்பில் அரசு வெளிப்படுத்துவதோடு, உண்மையில் விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்துவதற்காகவே கருணாவை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் அரசிற்கு இரு வகை இலாபம் உண்டு. ஒன்று சர்வதேசத்தின் பார்வையில் சிக்கலை சந்தித்துள்ள இலங்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் எனில் விடுதலைப்புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும் வேண்டும் இல்லாவிடின் இப்போதைய அரசு எதிர்பார்ப்பது எப்படியும் நடக்கப்போவதில்லை. அதே போன்று மறுபக்கத்தில் மஹிந்தவிற்கோ கோத்தபாயவிற்கோ மீள் எழுவதும் சாத்தியம் இல்லை எனப்படுகின்றது.

அதேபோன்று அமெரிக்காவின் பார்வையும் தற்போது இலங்கையில் அதிகமாகி வருவதோடு, சர்வதேசமே இலங்கையை உற்று நோக்கும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது.

இதன் போது அரசிற்கு முட்டுக்கட்டையாக இருப்பது மஹிந்த மற்றும், போர்க்குற்றமே அவற்றினை தாண்டி அரசு செயற்படுவது என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

போர்க்குற்றம் பற்றி கூற வேண்டும் எனில் இறுதி யுத்தம் பற்றியும் கேள்விகள் எழும் அதன் போது அரசிடம் பதில் தயாராக இருக்க வேண்டும், இல்லாவிடின் அதுவே அரசிற்கு எதிராக திசை திரும்பிவிடும் ஆபத்தும் இருக்கத்தான் செய்கின்றது.

இதே நேரம் அரசு கொடுக்கும் பதில் எப்படி அமையும் என்பது தொடர்பில் தெரிய வில்லை இதன் காரணமாக கருணாவிற்கு உயிர் ஆபத்துகள் வந்து சேரும் ஆபத்தும் உண்டு.

அதேபோன்ற நிலையே கமாலுக்கும் ஆக இவர்கள் இருவரும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் அதனால் அரசு இவர்களை பாதுகாக்க சிறையில் அடைத்துள்ளதா? என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கின்றது.

இதேவேளை அரசிடன் போர்க்குற்றம் பற்றியும் யுத்தம் பற்றியும் வெளிப்படுத்தற்கான ஓர் ஆயுதமான பொன்சேகா கைவசம் இருக்கின்றார், அந்த பட்டியலுக்கான ஆட்சேர்ப்பே இப்போது நடந்த கைது. இதன் அடுத்த இடத்தில் கமால் காத்திருக்கின்றார்.

இதேவேளை கருணா அரசுக்கு சாதகமாக மாறாவிட்டால் கடுமையாக தண்டிப்புகளும் இடம்பெறும், அவ்வாறான நிலை ஏற்படும் எனில் அதன் பாதிப்பு மஹிந்தவிற்கே வந்து சேரும்.

அப்படி ஓர் நிலையை எதிர் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுமானால் அதற்கான பதிலும் அரசு ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருக்கும்.

ஆக மொத்தம் சர்வதேசத்தின் பார்வையை நல்ல விதமாக மாற்ற அரசு திட்டமிட்டு செய்யும் செயற்பாடுகளே இப்போது நடைபெற்று கொண்டு வருகின்றது.

எப்படியும் இராணுவத்தினை மட்டும் எந்த நிலையிலும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்ற கூற்றையே இலங்கை அரசு அன்றாடம் வலுப்படுத்திக் கொண்டு வருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்பட தக்கது.

எவ்வாறாயினும் அடுத்த நல்லாட்சியின் பிறந்த தினத்திற்று முன்னர் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தவும் எதிர்ப்புகளை முற்றாக அழிக்கவுமே அரசு ஆயத்தமாகி வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.

-http://www.tamilwin.com

https://youtu.be/CG4FyJDYTgg?list=PLXDiYKtPlR7P3tpMqUsZj2yHT0TIUxUwn

TAGS: