சர்வதேச ரீதியாக தமிழீழம் அமைக்க திட்டம் – அமெரிக்காவின் கைப்பாவையாக இலங்கை..!!

tamileelamதமிழீழமும், தனி இராச்சியமும் அமைக்க பல்வேறு வகையிலும் திட்டமிடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர்களை நினைவுகூருவதற்கோ அல்லது மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கோ எந்தவிதமான எதிர்ப்புகளையும் நாம் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் தனி ஈழம், தனி இராச்சியம் அமைத்துக் கொள்வதற்கான கொள்ளைகளுக்கு மட்டுமே நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்.

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் தனி இராச்சியம் அமைப்பதற்கான செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றது. வெளிநாடுகள் ரீதியாகவும் அதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது.

இப்போதைக்கு இது நிறைவேற்றப்பட்டு விட்டதாகவே தோன்றுகின்றது. தனி ஈழத்தை பிரிப்பதில் பிரதமர் ரணிலும் உதவி செய்து வருவதாகவே தோன்றுகின்றது.

இவ்வாறான நிலையில் இலங்கையில் ஒற்றையாட்சியை வலுப்படுத்தவும், நாடு பிளவு படுவதனை தடுக்கவும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும்.

எமக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி முறையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதும் இப்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான தேவையாகும்.

அதேபோன்று அமெரிக்காவுடன் கண்மூடித்தனமான ஒப்பந்தங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனால் அமெரிக்காவின் தேவைகளுக்கான வகையில் இலங்கை மாறிவருகின்றது. இதன் மூலமாக தேசிய விடுதலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக முழு நாட்டையுமே காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றது எனவும் வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: