சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பிக்கள் ஆதரவு- அதிமுக தலைமையை ஏற்க நேரில் வலியுறுத்தல்

sasikalaசென்னை: சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 49 எம்பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தினர்.

அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வலியுறுத்தி நாள்தோறும் போயஸ்கார்டனுக்கு அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். இருந்தபோதும் அக்கட்சி தொண்டர்களால் இதை ஏற்க முடியாமல் உள்ளனர்.

இதனிடையே போயஸ் கார்டனுக்கு நேற்று அதிமுகவின் 49 எம்.பிக்களும் ஒன்றாக தம்பிதுரை தலைமையில் ஆஜராகினர். நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக திகழும் அதிமுகவுக்கு மொத்தம் 50 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் சசிகலா புஷ்பா கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சசிகலா புஷ்பாவை தவிர 49 எம்.பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பிக்கள் பலரும், ஜெயலலிதாவைத் தொடர்ந்து சின்னம்மா சசிகலாவே அதிமுக தலைமையை ஏற்க தகுதியானவர் என தெரிவித்தனர்.

-tamil.oneindia.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • LOGANATHAN wrote on 15 December, 2016, 8:36

  நாசமா போங்கடா மானம் இல்லாத ஈன மக்கள்

 • Anonymous V wrote on 15 December, 2016, 10:08

  1972 புரட்சி தலைவர் !!!
  1989 புரட்சி தலைவி !!!
  2016 புரட்சி தோழி !!!
  அதிமுக என்றாலே புரட்சிதான் !!!

 • Anonymous wrote on 15 December, 2016, 11:05

  பெரியம்மா (ஜெயலலிதா) மறைவிற்கு பின் சின்னம்மாதான் (சசிகலா) அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தும் தவப்புதல்வர்களே (49 எம்பிக்கள்)
  அலிபாபாவும் 49 திருடர்களும் என்கிற புதிய திரைப்படத்திற்கு கதாநாயகனாக ஓ.பன்னேர்செல்வத்தையும், திரைக்கதை வசனகர்த்தாவாக சசிகலா நடராஜனையும், டைரக்டர் தயாரிப்புக்கு சசிகலா என்ற உங்களுடைய தேர்வு படம் சூப்பர் ஹீட் ஆயிடும் என்பதில் சந்தேகமில்லை.

 • en thaai thamizh wrote on 15 December, 2016, 11:38

  ஹாஹாஹா -சரியாக சொன்னீர் – அங்கு நடப்பது எல்லாமே மடமைக்கு மகுடம் வைத்து தமிழர்களுக்கும் அறிவுக்கும் வெகு தூரம் என்று காண்பிக்கின்றனர். அங்கு துதி பாடியே எல்லா காரியமும் நடக்க முடியும்– திறமைக்கு மதிப்பில்லை– நல்லவர்களுக்கு-நல்ல தமிழர்களுக்கு காலமில்லை.

 • ஜி.மோகன் கிள்ளான் wrote on 15 December, 2016, 18:53

  இப்பவே சசிகலா காலில் விழுகிறான்கள் மானம் கேட்ட தமிழ் நாட்டு மந்திரிகள். இவன்கள் எங்கே நல்லதை செய்ய போறான்கள் ஒரு மானம் உள்ள சுத்த தமிழன் தமிழ் நாடுக்கு வரவேண்டும் முதல் அமைச்சராக. எல்லாம் வேசம்தான் பணம் பணம் பணம் அரசியல் நடதுகிறன்கள்

 • சோழவேந்தன்  wrote on 15 December, 2016, 19:49

  அதிமுக என்றாலே புரட்சிதான் !!!
  ஆனால் மக்களுக்கு கிடைப்பது என்னவோ வறட்சிதான் !!!
  இதனால் அதிமுக புதிய தலைமைத்துவம் பயப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு வறட்சி என்பது ஒன்றும் புதிலல்ல.

 • ישראל טמילית  wrote on 15 December, 2016, 20:17

  பெரியம்மாவின் தாரக மந்திரம்  :
  “மக்களால் நான் … மக்களுக்காக நான் ”
  சின்னம்மாவின் தாரக மந்திரம்  :
  “மக்குகளால் நான் … மக்குகளுக்காக நான்”  

   

 • abraham terah wrote on 16 December, 2016, 9:28

  சின்னம்மா! சட்டமன்ற உறுப்பினர்களையும் வாங்கி விடுங்களேன்! உங்களுக்காக அவர்களும் காத்துக் கிடக்கிறார்கள்!

 • en thaai thamizh wrote on 16 December, 2016, 9:57

  ஐயா மோகன் அவர்களே– தமிழ் நாட்டில் துதி பாடியும் நக்கியும் சப்பியும் இருந்த இடத்திலேயே தரையில் விழுந்து வணக்கம் சொன்னால் தான் வாழ முடியும் போல் இருக்கிறது– ஈன ஜென்மங்கள். தமிழ் திரைப்படங்களில் தான் கொள்கை-கடமை கண்ணியம் கட்டுப்பாடு.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)