சிவப்புச் சட்டைக்குப் பதிலாக வெறும் துண்டுடன் தண்ணீர் தடைக்கு எதிராக ஜமால் போராட்டம்

jamalசுங்கை    புசார்    அம்னோ   தொகுதித்     தலைவர்    ஜமால்   முகம்மட் யூனூஸ்,   வழக்கமாக   அணியும்    சிவப்புச்    சட்டைக்குப்   பதிலாக    கட்டிய துண்டோடு சிலாங்கூரில்   நீர்  விநியோகத்     தடைக்கு     எதிராக   போராட்டத்தில்     குதித்தார்.

இன்று    காலை   ஜாமால்   15   ஆதரவாளர்களுடன்    ஷா   ஆலம்   மந்திரி பெசார்   அலுவலகம்   சென்று   வீட்டில்   குளிப்பதற்குத்   தண்ணீர்   இல்லை   என்பதால்    அங்கு   குளிக்க    வந்ததாகக்  கூறினார்.

அம்பாங்கில்  உள்ள   தன்  வீட்டில்    நான்கு   நாள்களாக   தண்ணீர்    வரவில்லை   என்றாரவர்.

“இது  சிவப்புச்   சட்டை   அல்ல.  வெள்ளைத்  துண்டு. நான்  ஆர்ப்பாட்டம்   செய்வதற்காக   இங்கு   வரவில்லை.  மந்திரி  புசார்   அலுவலகத்தில்   குளிக்கத்தான்    வந்தேன்.

“அவரது  அலுவலகத்தில்   குளிக்க  முடியாவிட்டால்,  கீழ்மாடியிலாவது   குளிக்க   விடுங்கள்”,  என்றார்.

மந்திரி    புசார்   அஸ்மின்  அலியும்   மாநில    அரசும்   தண்ணீர்   பிரச்னைக்குத்   தீர்வு   காணாமல்  அதை     அரசியலாக்குவதாக  ஜமால்    குற்றம்    சாட்டினார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • singam wrote on 21 December, 2016, 16:21

  Very good Jamal. Also protest in front of Bukit Aman, and urge the Police to grab MO1. 

 • s.maniam wrote on 21 December, 2016, 21:26

  எருமைகளோடு சேர்ந்து குட்ட்டையில் குளித்து கம்பத்தில் மீன் பிடித்து வாழ்தவனெல்லம் மந்திரி பெசார் அலுவலகத்தில் குளிப்பதற்கு வசதி கேட்க்கிறான் !! பக்கத்தான் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறதா !! மாட்டு தலையை வைத்ததற்கே எவனும் எதுவும் செய்ய வில்லை ! தெரு ஆர்பாட்டமெல்லாம் நமது நாட்டில் சகஜமாகி விட்டது !! காவல் துறை தன் கடமையை செய்கிறது !!

 • மு.த.நீலவாணன் wrote on 22 December, 2016, 1:08

  இப்பழுதுதான் நீங்கள் சரியான பாதைக்கு வந்திருக்கிறீர்கள் ! வீணே
  இன அரசியலை தூண்டி விடுவதை விட்டு விட்டு , இது போன்று மக்கள் பிரச்சனையை கையிலெடுத்திருப்பது பாராட்டுகுறியது. வாழ்த்துக்கள்.

 • Dhilip 2 wrote on 22 December, 2016, 3:05

  Very good Jamal. Also protest in front of Bukit Aman, and urge the Police to grab MO1.

 • vethian wrote on 22 December, 2016, 9:07

  இப்படியெல்லாம் செய்து பெயர் வாங்க வேண்டி இருக்கு . ஆனா எங்க அரசியல் மன்னர்கள் ஆமாம் சாமீ போட்டே பட்டம் பதவியை தற்காத்து கொள்வார்கள் . ஒரு நாள் குளிக்க வில்லை என்பத்ற்காக இப்படி ஒரு போராட்டம் .ஆனா ஒருத்தன் மூணு நாளா ……. பின்னாலே கழுவாமே இருந்தானுக்கு சொன்னதை நாம நம்பினோமே .

 • mannan wrote on 22 December, 2016, 9:10

  TNB அலுவலகம் முன் செய்ய வேண்டியதை மந்திரி அலுவலகம் முன்பு செய்வது அறிவுள்ள செயல் அல்ல.

 • ஸ்ரீகர முதல்வன் wrote on 22 December, 2016, 9:45

  எருமைகளோடு சேர்ந்து குட்டையில் குளித்து கம்பத்தில் மீன் பிடித்து வாழ்ந்தது, வெள்ளை சோற்றை மட்டும் வைத்து கொண்டு குழம்பு என்றால் என்னவென்று தெரியாமல் கருவாட்டை சுட்டு தின்றது அல்லது பெலச்சானை சேர்த்து உண்டது என்பதெல்லாம் மறந்து மாமா மகாதீரினால் இன்று காலை உணவுக்கே நாசி பிரியாணி கேட்கும் நிலைக்கு வந்தவர்கள் குளிப்பதற்கு மந்திரி புசார் அலுவலகத்தை நாடுவது ஆச்சர்யம் இல்லை.
  அதேவேளை சிலாங்கூரை ஆட்சி செய்யும் பக்கத்தான் அரசாங்கம் மக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாமல் ரப்பர்போல் இழுத்து கொண்டே போவதும் எதிர்வரும் பொதுதேர்தலில் பின்னடைவை சந்திக்க கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

 • ஸ்ரீகர முதல்வன் wrote on 22 December, 2016, 9:52

  நல்லவேளை மஇகா-வினர் யாரும் கோவணத்தோடு சென்று ஜாமாலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது இந்தியர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி.

 • en thaai thamizh wrote on 22 December, 2016, 14:43

  எல்லாம் வெறும் நாடகம்– இந்த ஈனங்களுக்கு வேறு வேலை கிடையாது. – இவன்கள் பண்ணும் அநியாயங்களுக்கு அளவே இல்லை.

 • Anonymous wrote on 22 December, 2016, 21:19

  இனிவரும் காலங்களில் எந்த மாநிலத்திலாவது தண்ணீர் இல்லை என்றால் அனைத்து வசதிகளுக்கும் அந்தந்த மாநில மக்கள் அனைவரும் அம்மாநில மந்திரி  புசார் அலுவலகத்தை நாடலாம் ஜாமாலைப்போல. 

 • Anonymous wrote on 5 January, 2017, 15:00

  என்ன பைத்தியம் இவனுக்கு காவல் காரர்கள் ஏன் தொலைபேசி முலம் மருத்துவமனைக்கு தொடர்பு கொள்ள வில்லை

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)