டிஜி: குடிநுழைவுத் துறையில் ஊழல் ‘துரோகிகள்’ இருக்கவே செய்கிறார்கள்

dgகுடிநுழைவுத்   துறை    தலைமை     இயக்குனர்   முஸ்டபார்     அலி,   அத்துறையில்  ஊழலில்    ஈடுபடுவோர்    இன்னும்    உண்டு     என்று   கூறினார்.

பணியாளர்கள்    அனைவரும்    நேர்மையுடன்     நடந்துகொள்ள    வேண்டும்    என்பதை   வலியுறுத்திய     அவர்,   நேற்றிரவுகூட   ஒரு   சம்பவத்தில்    சில   அதிகாரிகள்   “வேறு   விதமாக   நடந்து   கொண்டார்கள்”   என்றார்.

“வெளியே   சில  “சூத்திரதாரிகளும்”   உள்ளே    துரோகிகளும்    இருப்பதை  நினைத்தால்    வருத்தமாக    இருக்கிறது.

“ஊழலையும்   தவறுகளையும்    பொறுத்துக்கொள்ள   மாட்டோம்    என்பதை    இங்கு   வலியுறுத்துகிறேன்”,  என   முஸ்டபார்    புத்ரா    ஜெயாவில்    குடிநுழைவுத்   துறையின்   முதலாவது    மாதாந்திர  ஒன்றுகூடலின்போது    தெரிவித்தார்.

கடந்த    ஆண்டு    ஒழுங்குவிதிகளை   மீறிய    32   அதிகாரிகள்   பணிநீக்கம்    செய்யப்பட்டதாக    அவர்   தெரிவித்தார்.

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையத்   துணை    தலைமை    ஆணையராக   இருந்த   முஸ்டபார்   கடந்த   ஆண்டில்    குடிநுழைவுத்   துறை   தலைவராக    பொறுப்பேற்றார்.